தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

இலங்கையின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டுத் தீர்மானம் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு, அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால், அமெரிக்கப் பிரதிநிதி எலீன் டொனஹோவிற்கு விளக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முற்று முழுதாக இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்றது என ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவும் திட்டமில்லை.
அமெரிக்கா மற்றும் அதன் நாடுகள் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்த மாட்டார்கள் என கருதுகின்றோம்.
நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெ தவிர, இலங்கையை தனிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten