பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிமொன் டன்ஸ்ஷேக் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை தெரிவுக்குழு, அந்த நாட்டின் மூன்று பிரதான கட்சிகளின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது.
இந்தக்குழு பிரித்தானியாவின் வெளியுறவு செயற்பாடுகள் நிதிகள் போன்ற விடயங்களை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் இன்னும் பிரித்தானிய அரசாங்கம் இன்னும் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்று சிமொன் டன்ஸ்ஷேக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பிரித்தானிய அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும் என்று வெளியுறவுக்குழு கோரியுள்ளதாக டன்ஸ்ஷேக் குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு இலங்கையின் தற்காலையில் பிரித்தானிய பிரஜை கொல்லப்பட்டதன் விசாரணை முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த கொல்லப்பட்டவரின் சகோதரருடன் டன்ஸ்ஷேக்கும் இலங்கைக்கு சென்றிருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten