இலங்கை தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பழங்குடி அரசாங்கங்களைப் போன்று செயற்படுகின்றது. இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லை.
நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிய போது அதனை உதாசீனம் செய்து அமைச்சர் சமரசிங்க நாடு திரும்பினார். அவ்வாறே எமது அமைச்சர்களின் இராஜதந்திர அணுகுமுறைகளாகும்.
மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரதிநிதிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவுடன் டீல் பேசிக் கொண்டே, சோசலிச தலைவர் சாவேஸின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்களை பல கோடி ரூபா செலவழித்து அனுப்பி வைக்கின்றது.
மக்களின் பணமே இவ்வாறு விரயம் செய்யப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten