தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

வட இலங்கையில் மனித உரிமைகள் மேலும் முன்னேற வேண்டும்!- யாழ். சென்ற அமெரிக்க அதிகாரி


இலங்கையின் வட பகுதிக்கு நேரில் சென்றுள்ள அமெரிக்க தூதரக அரசியல் துறை அலுவலர் ஜேக்கப் ஸ்ரிக்கி, அங்குள்ள மனித உரிமை நிலைமைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடங்களில் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமது வடபகுதிக்கான பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜேக்கப் ஸ்ரிக்கி,
வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகுந்த கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது என்றும், கொழும்புக்குச் செல்வதற்காக வந்த மக்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது ஒரு சம்பவமாக இருந்த போதிலும், இந்த பகுதியின் நிலைமைகளை விளக்குவதற்கானதொரு சிறந்த உதாரணமாக இந்து அமைந்திருக்கின்றது என்றும் கூறினார்.
இதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதிலும் இது முக்கிய விடயமாக இருக்கின்றது என்று கூறிய ஜேக்கப் ஸ்ரிக்கி, சுதந்திரமான மக்கள் நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற பரிந்துரைக்கு மாற்றாக அந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டமை மிகவும் கரிசனைக்குரியது என்றும் கவலை வெளியிட்டார்.
சுதந்திரமான நடமாட்டம், பேச்சு சுதந்திரம் என்பன பிரபஞ்சத்தில் அனைவருக்கும் உள்ள உரிமையாகும். இலங்கை சட்டங்களும் அதனை ஏற்றிருக்கின்றன.
இந்த வகையில் வடபகுதி நிலைமைகளில் மேலும் முன்னேற்றங்கள் தேவை என்பதை உணர முடிந்தது என்றார் ஜேக்கப் ஸ்ரிக்கி.

Geen opmerkingen:

Een reactie posten