தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவோரை நாடு திரும்ப அனுமதிக்கக் கூடாது – பியசிறி விஜேநாயக்க


இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவோரை நாடு திரும்ப அனுமதிக்கக் கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தகவல்களை வெளியிடுவோரை நாடு திரும்ப விடக்கூடாது.
நாட்டை நெருக்கடிக்குள் ஆழ்த்துவதே இவர்களின் நோக்கமாகும்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கக் கூடாது.
வடக்கில் தமிழர் பூமியொன்றை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
வடக்கு இராணுவ முகாம்களை அகற்றும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது என பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten