கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதியொருவர் தமக்கு விடுதலை அல்லது மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிறைச்சாலையின் கூரை மீதேறி தமது போராட்டத்தை ஆரம்பித்தார்.
அதன்பின்னர் திங்கட்கிழமை மேலும் இரண்டு மரண தண்டனை கைதிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது ஒரு கைதி மாத்திரம் நேற்று கீழிறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் போகம்பரை சிறைக்கைதிகள் சிலரும் இவ்வாறு தமது மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதனிடையே, வவுனியா சிறைச்சாலை புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்று அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், தமது அதிகாரிகள் மீது பலர் பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக குறிப்பிட்டார்.
ஆனால் அவர்கள் எவ்வாறான கடினமாக தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தமக்குத்தான் தெரியும் என்று அவர் கூறினார். சிறைக்கைதிகள் தப்பிச் சென்றால் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுகின்றார்கள். அதனால் அவர்களும் கைதிகள் போன்று இருப்பதாக உணர்வதாக அமைச்சர் கஜதீர குறிப்பிட்டார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கமரா பொருத்த நடவடிக்கை
பேராதனை பல்கலைக்கழகத்தில் சி.சி.ரி.வி கமரா கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் அத்துல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், நாட்டின் கல்வித்துறைக்காக செலவிடுவதற்காக உள்ள வரையறுக்கப்பட்ட நிதியை இவ்வாறு விரையமாக்கும் வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றமையை கண்டிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் 18 லட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர்- அமைச்சர் டிலான் பெரேரா
தொழிற்றுறைகளை பிழையான உருவகத்துடன் எதிர்க்கட்சிகள் நோக்குவதாக அரசாங்கத்தினால் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளவர்களின் குடும்பத்தினராகவே இருக்கின்றனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இலங்கையின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 21 மில்லியன்கள் ஆகும். அதில் 18 லட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர்.
அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர். ஒவ்வொரு துறைகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.
எனினும், எதிர்கட்சியின் அதனை பிழையான உருவகத்தில் நோக்குவதாக குறிப்பிட்டார். அதனால் அவர்கள் எந்தவித உணர்வுகளும் இன்றி முழு துறையையும் பாதிக்கும் வகையில் கருத்துவெளியிடுவதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten