இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே காணக்கூடியதாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய அயர்லாந்தின் தூதுவர் கராட் கோர் இதனைத் தெரிவித்துள்ளார்
இலங்கையின் மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சபை புதிய வரையறைகளை வெளியிட்டது.
எனவே இதன் அடிப்படையில் இலங்கை செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மனித உரிமைகள் மாநாடு இடம்பெறுகின்ற நிலையில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பிலும், மனிதாபிமான விடயங்கள் தொடர்பிலும் இலங்கையின் பொறுப்புக் கூறுதலை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDSXNYht1.html
|
Geen opmerkingen:
Een reactie posten