தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

தமிழ் மக்களின் தலைவர்களுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மன்மோகன் சிங் !!


சொன்னதை எத்தனை தரம் திருப்பி சொல்வாரோ??
இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பதில் அளித்து பேசியபோதே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பொதுமக்கள் படும் துயரம் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். இலங்கைத் தமிழர் சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ்வதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை அரசு தமிழர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்டாமல் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை.
தமிழ் மக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjr1.html

Geen opmerkingen:

Een reactie posten