மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தி.மு.க. தொடுக்கும் அஸ்திரங்களை காங்கிரஸ் மேலிடத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், 'ஈழப் பிரச்சினையில் பார்வையாளராக காங்கிரஸ் இனியும் இருக்க முடியாது என்கிறார்கள் சிலர்.
இதை, ராகுல் காந்தியின் கவனத்துக்கும் கொண்டுபோனார்கள்.
தி.மு.க. நடத்தும் டெசோ கூட்டங்களில் காங்கிரஸும் கலந்துகொள்ள வேண்டும் என்பது இவர்களில் சிலரின் கோரிக்கை.
8-ம் தேதி அன்று டெல்லியில் டெசோ மாநாடு நடக்கும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார்.
எனவே, உடனடியாக முடிவெடுத்தாக வேண்டிய நெருக்கடி காங்கிரஸ்காரர்களுக்கு. கடந்த திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றம் முடிந்ததும், தமிழக எம்.பி-க்கள் அனைவரும் தன்னை வந்து சந்திக்குமாறு ராகுல் அழைப்பு விடுத்தார்.
அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால், அனைவரும் உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.
மிக சீரியஸாகப் பேசத் தொடங்கிய ராகுல்... இலங்கைத் தமிழர் விவகாரம், டெல்லியில் நடைபெறும் டெசோ கருத்தரங்கம் பற்றி கேட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நம் நிலைப்பாட்டில் மாற்றம் வேண்டுமா?’ என்று அவர் கேட்டதும், தமிழக எம்.பி-க்கள் திகைத்துள்ளனர்.
ம்! சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தன்னுடைய கருத்துக்களைக் கவனமாக எடுத்துவைத்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நாம் சரியான நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறோம்.
அவர்களுக்கு ஏராளமான நன்மைகள் இந்தியாவில் இருந்து கிடைப்பதற்கு வழிசெய்துள்ளோம்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்றாலே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம்தான் உள்ளது.
நாம் செய்த நன்மைகள் எதுவும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எப்போதும் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் செய்வதுதான்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவர்கள் இந்த விவகாரத்தை இன்னும் பிரதானப்படுத்தி காய்களை நகர்த்துவார்கள். அதற்கு நாமும் ஈடுகொடுக்க வேண்டும்.
எனவே, நாம் அந்த விவகாரத்தில் ஒதுங்கி இருக்காமல், சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, டெல்லியில் நடைபெறும் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் யாராவது கலந்துகொண்டால்கூட நல்லதுதான். அதற்கு நமக்கு அழைப்பிதழும் வந்துள்ளது.
அதை தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரியே எடுத்து வந்து என்னை நேரில் சந்தித்துக் கொடுத்துள்ளார்’ என்ற ப.சிதம்பரம், கொஞ்சம் இடைவெளிவிட்டு...
'நாங்கள் இப்படிச் சொல்வதால் ராஜீவ் காந்தியின் படுகொலையை மறந்துவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. அதற்குக் காரணமானவர்களை நாங்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டோம்’ என்றும் சொல்லிவைத்தாராம்.
'நாங்கள் இப்படிச் சொல்வதால் ராஜீவ் காந்தியின் படுகொலையை மறந்துவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. அதற்குக் காரணமானவர்களை நாங்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டோம்’ என்றும் சொல்லிவைத்தாராம்.
அமைதியாக இதைக் கேட்டுக்கொண்ட ராகுல், 'அந்தக் கூட்டத்தில் யாரைக் கலந்துகொள்ள வைக்கலாம்?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த சிதம்பரம், 'தமிழகத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மீது இந்த விவகாரத்தில் எதிர்மறையான எண்ணம்தான் உள்ளது.
திடீரென்று போய் நாங்கள் டெசோ மேடையில் உட்காருவதும் நன்றாக இருக்காது.
அதே சமயம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கலந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.
அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நல்ல நட்பிலும் தொடர்பிலும் இருப்பவர்’ என்றும் ஆலோசனை வழங்கினாராம்.
சிதம்பரத்தின் பேச்சை கவனமாகக் கேட்ட ராகுல், ஓகே என்பதுபோல் தலையசைத்துவிட்டு, 'இந்தத் தகவலை அம்மாவிடம் சொல்லி விடுங்கள்’ என்று சோனியாவுக்குத் தகவல் சொல்லச் சொன்னாராம்.
ஜூனியர் விகடன்
Geen opmerkingen:
Een reactie posten