தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

அமெரிக்காவின் பிரேரணைக்கு இலங்கையும் ஆதரவு?

புதிய பிரேரணை எப்படியானது? அமெரிக்கா விளக்கம்
news
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரேரணை எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
 
வொஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள பிரேரணை, கடந்த ஆண்டு இலங்கை மீது கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
""நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ஆம் ஆண்டு தீர் மானத்தின் மீது இந்தப் பிரேரணை கொண்டுவரப்படும். 
 
இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளைப் பின்பற்றும்படி புதிய பிரேரணை இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளும்.
 
இதுதான் பிரேரணையின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்'' என்று பதிலளித்துள்ளார் பற்றிக்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்க்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார். 
எனினும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்டை மேற்குலகம் எடுப்பதற்கு முன்னர், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக  இலங்கைத் தூதுவர் ஒருவரை வொசிங்டனுக்கு இன்று அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த பிரதிநிதியிடம், அமெரிக்காவுக்கு தாம் சவால் விடுக்கவில்லை என்றும், தீர்மானத்தை எதிர்க்கும் அணுகுமுறையை கைவிடுவதாகவும், சிறிலங்கா தகவல் அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

http://onlineuthayan.com/News_More.php?id=868371873710261656

இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றம்; அமெரிக்கா தெரிவிப்பு
news
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் காரணமாக இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனநாயகம் மற்றும் உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென ஐ.நா உறுப்பு நாடுகளில் சிலவும், மேலும் சில நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், அமெரிக்கா அவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Geen opmerkingen:

Een reactie posten