ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தமிழர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழர் பெண்கள் செயற்களமும் இணைந்து இந்திய பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று சென்னையில் உள்ள தலைமை தபால்நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், தமிழின உணர்வாளர்கள் என சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
அவர்கள் எழுதிய அந்த அஞ்சல் அட்டையில், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் கண்துடைப்பு தீர்மானங்களுக்கு மாற்றாக தமிழர்களின் கோரிக்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டி தீர்மானங்கள்:
1. தமிழின அழிப்புச் செய்த இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் உடனடியாக நிறுத்திடு.
2. தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்குவதை நிறுத்துவதோடு, அங்கு குவிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவத்தை உடனே வெளியேற்று.
3. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு பற்றிய சுதந்திரமான பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்திடு.
4. உலகம் முழுவதும் வாழ்கின்ற ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்திடு.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டன.
Geen opmerkingen:
Een reactie posten