தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

பொதுமக்களை கொலை செய்ததை ஆதரிக்கும் அனைவருமே இராட்சதரே!!


இலங்கைப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதே அமெரிக்கத் தீர்மானத்தின் நோக்கம்: ஜீ.எல்.பீரிஸ்
உலகில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகாமாக காணப்படுகின்ற போதும், இலங்கை மீது குற்றம் காணவே சர்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றில் பேசியபோதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையிலுள்ள பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் விடாமுயற்சியின் வெளிப்பாடாகவே அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கருத முடியும்.
அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து பெரிதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் அரசாங்கத்தின் சாதனைகளை அங்கீகரிப்பதாக தமக்கு உறுதி தரப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, இலங்கைக்க எதிரான பிரேரணையை ஆதரித்த நாடுகள் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்தவையாகும். இதன் காரணமாகவே ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்படக் காரணம் என தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmq0.html

Geen opmerkingen:

Een reactie posten