தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

இந்தியாவில் பௌத்த பிக்கு தாக்கப்பட்டதற்கு முஸ்லிம்களை குற்றஞ்சாட்டியமைக்கு எஸ் ஹமீட் கண்டனம்


சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பொதுபல சேனா செய்துவந்த பகீரத பிரயத்தனம் கை கூடாத நிலையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பவத்திற்கும் முஸ்லிம்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு பொது பல சேனாவிற்கு கிறுக்கு முற்றியுள்ளது. என அகில முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
 
பொதுபல சேனா என்ற அமைப்பினால் முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்களை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து மனிதனைக் கடிப்பதுபோல் இந்தியாவில் பௌத்த பிக்கு தாக்கப்பட்டதற்கும் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களே காரணம் என்று பொது பல சேனா கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நாளை ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டால் அதற்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகள்தான் காரணம்  அல்லது செவ்வாய் கிரகத்தில் ஓட்டை ஒன்று உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டால் அதற்கும் முஸ்லிம்களே காரணம் என்றும் பொது பல சேனா  சொல்லுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. என அகில முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பொதுபல சேனா செய்துவந்த பகீரத பிரயத்தனம் கை கூடாத நிலையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பவத்திற்கும் முஸ்லிம்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு பொது பல சேனாவிற்கு கிறுக்கு முற்றியுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக கீழ்த்தரமான காழ்ப்புணர்வுகளை  கக்கி பௌத்த தர்மத்தையே அவமதிக்கின்ற முறையில் இனவாதத்தையும், மதவெறுப்பையும், அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களுக்கூடாக கக்கிக் கொண்டிருக்கின்ற பொது பல சேனாவின் உள்ளக நோக்கம் முஸ்லிம்களும் ஜெனீவாவிற்குச் சென்று அரசுக்கு எதிரான கோசம் எழுப்ப வேண்டும் என்பதா ? என்று வினவ விரும்புகின்றோம்.
சர்வதேச ரீதியில் இலங்கை நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தி நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முற்படுகின்ற பொதுபல சேனாவின் பின்னனியில் யார் செயற்படுகிறார் என்பதை துணிச்சல் இருந்தால் கூற முடியுமா?
ஜாதிக ஹெல உறுமயவும் தேர்தலில் குதிப்பதற்கு முன்பு இனவாத செயற்பாடுகளில்தான் ஈடுபட்டது. அதேபோல், இன்று பொதுபல சேனா அதேபோன்ற இனவாத செயற்பாடுகளில் ஜாதிக உறுமயவை விட பல மடங்கு வேகமாக ஈடுபடுவதற்கு எங்கிருந்து உதவிகளும், ஒத்தாசைகளும் வருகின்றன. என்பதை அவர்கள் கூறினாலும், கூறாவிட்டாலும் மக்கள் அறிவார்கள். எனவே, வங்கரோத்து அரசியல் செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமயவும்,  பொதுபல சேனாவும் முற்பட வேண்டாம் என்று நாம் வேண்டுகின்றோம்.
ஹலால் சான்றிதழை ஜம்இய்யதுல் உலமா திணிக்கின்றது, என்று கூறிய பொதுபல சேனா, இன்று வரை அவ்வாறு திணிப்பதற்கு ஜம்இய்யதுல் உலமாவிடம் இருந்த பலமோ, அதிகாரமோ என்ன என்பதை குறிப்பிடவில்லை. கற்பனா வளம் இருக்கின்றது என்பதற்காக எல்லை கடந்து கற்பனை செய்கிறார்கள்.
முஸ்லிம்கள் மிகவும் பொறுமையுடன் பொது பலசேனாவின் விடயத்தில் செயற்படுவதற்கான காரணம் இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் பொதுபல சேனாவின் பிரச்சாரத்தால் அள்ளிச் செல்லப்படவில்லை. எனவே, எங்களது எந்தவொரு செயற்பாடும் அவர்களது  உணர்வுகளைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும்.
ஆனால் பொதுபல சேனா தொடர்ச்சியாக   தனது அநாகரிகமான , அசிங்கமான செயற்பாடுகளை சில வெளிநாட்டு பசைகளுக்காக தொடருமாக இருந்தால் பொதுபல சேனாவின் ஒவ்வொரு கூற்றுக்கும் தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். அதேநேரம் அரசாங்கம்  இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இந்த கூட்டத்திற்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது. என்பதையும் வினவ விரும்புகின்றோம்.
ஹலால் விவகாரத்ததைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் அபாயா விடயத்தில் கை வைக்க முனைந்தால் முஸ்லிம்களின் பொறுமையின் எல்லையினை தொட்டுப்பாரக்க வேண்டிவரும் என்பதையும் கூறிவைக்க  விரும்புகின்றோம். முஸ்லிம்கள் சிறுபான்மை என்பதற்காக அடிமைகளாக இருக்கமாட்டோம். அறிவுடமை ரீதியாக சிந்தித்து அடக்கமாக செயற்படுகின்றோம். அதற்காக தொடர்ந்தும் சீண்டிப்பார்க்க முற்படக் கூடாது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்கள பெண்களை வைத்து காம லீலைகள் நடாத்தப்படுகின்றன. என்று கூற முற்படுகின்ற பொது பல சேனா  அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முடியுமா ? என்பதையும்  கேட்க விரும்புகின்றறோம்.
கண்ணியமான சிங்கள சகோதரிகளை கண்ணியக் குறைவாக பேசிக்கொண்டு சிங்கள சமூகத்தை பாதுகாப்பதாக இனியும் பொது பல சேனா வேசம் போட முடியாது.
ஆட்சியாளர்கள் பொது பல சேனாவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் அல்லது பொதுபல சேனாவால் ஏற்படுகின்ற அனைத்து பாதிப்புக்களுக்கும் ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும். என்றும் கூறிவைக்க விரும்புகின்றோம். என்றுமுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmq1.html

Geen opmerkingen:

Een reactie posten