தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

தமது கட்சியை பதிவு செய்வதில் ஏன் தாமதம்?- தேர்தல் ஆணையாளரிடம் சரத் பொன்சேகா கேள்வி


ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தனது கட்சியை பதிவு  செய்வதில் உள்ள தாமதம் குறித்து கேட்டறிய இன்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளார்.
கட்சியை பதிவு செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் இன்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.
கட்சியில் இதுவரை இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? இதுவரை காலமும் ஆற்றிய செயற்பாடுகள் என்ன? போன்ற கேள்விகளை தேர்தல்கள் செயலக அதிகாரிகள் இதன்போது சரத் பொன்சேகாவிடம் எழுப்பியுள்ளனர்.
குறித்த ஆவணங்கள் மாத்திரமன்றி மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு, ஜனநாயக கட்சியை பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் முட்படுவார் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர், செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வழங்கினார்.
'தீப்பந்த" சின்னத்தின் கீழ் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களிலும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, கூட்டு கட்சியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு முன்னரும் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்த சரத் பொன்சேகா, ஜனநாயகக் கட்சியை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள
தாமதம் குறித்து முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten