தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

"இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி”!- ஆங்கில ஆவணப்படம் டெல்லியில் நாளை வெளியீடு


இலங்கையில் போருக்கு பிந்திய தமிழர்களின் அவல நிலை குறித்து பத்திரிகையாளர் மொஹூயா சௌத்ரி தயாரித்த "இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி' என்ற ஆங்கில ஆவணப்படம் டெல்லியில் நாளை திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக ஆதரவுடன் செயல்படும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) டெல்லியில் கடந்த ம் திகதி கருத்தரங்கம் நடத்தியது.
அக்கருத்தரங்கில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான "சனல் 4' தொலைக்காட்சிக் குழுவினரின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், டெசோ நிர்வாகிகள், சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 50 ஆர்வலர்கள் "சேவ் தி டமில்ஸ்' (தமிழர்களைக் காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
“இலங்கை போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும்'' என வலியுறுத்தி இந்த ஆர்வலர்கள் டெல்லியில் நாளை விவாத கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தக் கூட்டம் குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த சா. இளங்கோவன் கருத்துத் தெரிவிக்கையில்,
டெல்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு விவாதம் நடைபெறும்.  அதில், இலங்கை போருக்குப் பிந்திய தமிழர்களின் நிலைமை குறித்து பத்திரிகையாளர் மொஹூயா சௌத்ரி தயாரித்த "ஸ்ரீ லங்கா: பரீட் ஜஸ்டிஸ்' (இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி) ஆவணப்படம் திரையிடப்படும்.
மொஹூயா சௌத்ரியின் போருக்கு பிந்திய செய்தி சேகரித்த அனுபவங்கள், போர்க் குற்றங்கள் குறித்து பார்வையாளர்களுடன் பத்திரிகையாளர் ராஜேஷ் சுந்தரம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் விவாதிப்பர்'' என்று கூறப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் டி. ராஜா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten