அத்துடன், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரி இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் பிடியிலிருந்த போது பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது சமாதானத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த தமிழகத் தமிழர் ஒருவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனக் கோரி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே சவேந்திர சில்வா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டவரின் கடிதம் பாதி தட்டச்சு செய்யப்பட்டுள்ளதுடன், மீதி கையால் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் கடுமையான ஊடகப் பிரச்சாரங்களை முடுக்கி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஊடகப் பிரச்சாரங்களினால் தமிழ் மக்களை திசை திருப்ப முடியாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten