கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீடத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், இரண்டாம் ஆண்டு வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்களினால் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இரவு ஏழு மணியளவில் வளாகத்தில் உள்ள தனது விடுதியில் இருந்து கடைக்கு சாப்பாடு எடுக்கச்சென்ற மாணவன் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்கு பெரும்பான்மையின மாணவர்கள் சேர்ந்து குறித்த மாணவனை தாக்கிவிட்டு பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று ஒழிந்து கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்கப்பட்டவர் வர்த்தக பீடத்தில் முதலாம் ஆண்டு கல்வி பயிலும் ந.சஞ்ஜீவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட மாணவன் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjt2.html
Geen opmerkingen:
Een reactie posten