தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி !


ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தொழில்நுட்பக் காரணிகள், காலதாமதம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற் கொண்டே பாகிஸ்தானின் பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்க மறுத்துவிட்டது என அறிய முடிகின்றது.
பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமையானது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகுதியை இழக்கின்றன.
எனவே, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளையே இலங்கை இந்த முறை முழுமையாக நம்பியிருக்கின்றது.
இதனடிப்படையிலேயே இலங்கைக்கு ஆதரவாக மேற்படி நாடுகள் ஜெனிவாவில் களமிறங்கி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இதன் பிரகாரம் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்மொழிவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கை அரசு நல்லிணக்கத்தை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.
எனவே, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும். இலங்கை இறையாண்மைமிக்கதொரு நாடு. எனவே, அதன் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது ஆகிய சரத்துகள் உட்பட மேலும் பல விடயங்கள் பாகிஸ்தானின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன என அறியமுகின்றது.
இருப்பினும், பாகிஸ்தானின் பிரேரணையை மனித உரிமைகள் சபை தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்க மறுத்துவிட்டது.

Geen opmerkingen:

Een reactie posten