இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை எனக் கூறி கடந்த 8ம் திகதி சென்னை கோயம்பேட்டில் குறித்த மாணவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்திருந்தனர்.
3 நாட்களாக உண்ணாவிரதமிருந்த மாணவர்களை அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
குறித்த மாணவர்கள், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவரும் வரை தங்கள் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சென்ற பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ராயாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன், ஆதரவாளர்களையும் கைது செய்து சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.“
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாணவர்களும் தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்பபட்டது. வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டனர்.
இவர்களை பார்ப்பதற்காக லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் கூறும்போது, உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு வேறு வழிகளில் போராடுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்றுமாலை உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதை ஏற்றதால் மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
Geen opmerkingen:
Een reactie posten