இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உரிய தண்டனையை இலங்கை கடற்படை வழங்க தீர்மானித்துள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொன்னாலை கடற்படை முகாமில் நடைபெற்ற கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் அதனை தெரிவித்தார்.
வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள கடற்படை தயாராகி வருகின்றது.
இதற்காக இலங்கை கடற்பரப்பில் உள் நுழையும இந்தியப் படகுளைக் கண்காணிக்க விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.
இந்த ரோந்து நடவடிக்கையின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
இந்நிலையில் அவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் தொழிலுக்கு வராதபடி இலங்கை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மீன்பிடிப்பதற்கு எல்லை தாண்டி வந்தால் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள கடற்படை தயாராகி வருகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten