தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

ஆண் புணர்ச்சியை எதிர்ப்பது மனித உரிமை மீறலாகும்: கனடா உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எதெல்லாம் மனித உரிமை மீறல் பார்த்தீர்களா??ஓரினச்சேர்க்கைக்கு எதிராக பைபிள்,குரான்,இந்துசாத்திரங்களின் படி குரல் எழுப்பினால் அது மனித உரிமை மீறல்,ஐரோப்பாவில் இருந்து சென்று அமெரிக்க நாட்ட்டை கைப்பற்றி அங்குள்ள மக்களை காட்டுக்கு துரத்திவிட்டு தங்கள் மதங்களையும் மொழியையும் புகுத்தி ஆட்சி செய்வது மனித உரிமை!!சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிந்த பின்னும் சிறுவர்கள்,பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரிந்த பின்னும் அவர்களுடன் இணங்கிப்போவது சிறந்த மனித உரிமை!!கனடாவே உன் சட்டம் அபாரம்!!யார் காட்டுமிராண்டிகள்???

கனடாவில் வில்லியம் வாட்கோட்(William Whatcott) என்ற கிறிஸ்தவப்போதகர் ஓரினப் புணர்ச்சியை விமர்சித்து வெளியிட்ட துண்டு அறிக்கை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் ரெஜினாவிலும், ஸஸ்கட்டூனிலும் வாட்கோட் துண்டுப் பிரசுங்களை தபால் மூலமாக மக்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கும் ஓரின ஆண்புணர்ச்சியாளர்களை எதிர்த்து அரசு நடவடிக்கை எடுக்க நாம் ஆவன செய்யவேண்டும் என்று அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சஸ்கட்செவானின்(Saskatchewan) மனித உரிமை ஆணையம், வாட்கோட் தனது மாநில உரிமைகளை மீறியிருப்பதாகக் அவர்மீது குற்றம் சுமத்தியது.
கடந்த 2010ம் ஆண்டு வாட்கோட் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்தத் துண்டுப்பிரசுரங்களில் காணப்படும் வார்த்தைகள் வெறுப்பூட்டும் வகையில் இல்லை என்று தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பழைய தீர்ப்புக்கு முரணான புதிய தீர்ப்பை நேற்று வெளியிட்டது. இதில் ஓரினஆண்புணர்ச்சியாளரை நோய் பரப்புவோர், காமுகர், சிறுவர்களுடன் பாலுறவு கொள்வோர் என்று அந்த துண்டு அறிக்கையில் விமர்சித்துள்ளதால் இவர் மீது மனிதஉரிமை வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
http://www.canadamirror.com/canada/7071.html

Geen opmerkingen:

Een reactie posten