தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் தொடர்பாக கனடிய நாடாளுமன்றில் கருத்துப் பரிமாற்றம்!


கனடிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அண்மைக்கால விவாதங்களின்போது, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயல்கள் போன்றவை குறித்து அவ்வப்போது வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் கனடாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைவர் திரு.பொப் ரே தனது கேள்வி நேரத்தின்போது, சிறீலங்கா தொடர்பான கேள்வியொன்றை முன்வைத்தார். சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன், மனித உரிமை விடயத்தில் தோல்வியடைந்தும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் சிறீலங்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடாவின் நிலைப்பாட்டில் கனடிய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளதா என்பதையும், சிறீலங்காவில் இந்த மாநாடு நடைபெறாமல் தவிர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகளை கனடா எடுத்துவருகிறது என்பதையும் கூற முடியுமா என்று கடுமையான தொனியில் கேள்வி தொடுத்தார் பொப் ரே.

இதற்குப் பதிலளித்த ஆளும் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் வெளிவிவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர், சிறீலங்காவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை நாங்கள் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரிடமும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடமும் தெரியப்படுத்தியுள்ளோம். கனடா தொடர்ந்தும் உலகில் இடம்பெறும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பாக, குறிப்பாக சிறிலங்கா தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுக்கும
 
மறுநாளான நேற்றைய தினம், கனடிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான புதிய ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த திரு.ரொம் மல்க்கெயர், சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்வியொன்றை சபாநாயகரிடம் முன்வைத்தார். 2009ம் ஆண்டு தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட மிக மோசமான படுகொலைகள் மற்றும் கொடுமைகளின்போது, அதைத் தடுக்கும் விடயத்தில் சர்வதேசம் மிகப்பெரிய அளவில் தோல்விகண்டது. இது தொடர்பாக பொறுப்புக்கூறும் விடயத்தில் சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் கேட்கப்படுவதன்படி, சிறீலங்கா அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்க்கும் விடயத்தில் கனடியப் பிரதமர் ஸ்ரீவன் கார்ப்பர் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த கனடியப் பிரதமர், சிறீலங்கா விடயத்தில் போதிய மாற்றங்கள் வந்தால் ஒழிய, தான் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்கப்போவதாக அறிவித்த விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். நான் இப்படிக் கூறிய காலத்தைவிட, தற்போது அந்நாடு இன்னும் பிழையான திசையில் இன்னும் அதிக தவறுகளைச் செய்வதை நான் கரிசனையுடன் அவதானித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.
The QP Clip Tom Mulcair and Stephen Harper about sri lanka Commonwealth
Government of Canada reiterates its concerns about Sri Lanka’s Human Rights violations



 http://www.canadamirror.com/canada/7083.html

Geen opmerkingen:

Een reactie posten