
மிகவும் இக்கட்டமாக இருக்கும் இவ்வேளையில் வட கிழக்கில் எந்த ஒரு மக்கள் ஆர்ப்பாட்டமும் நடக்கக்கூடாது என்று கோட்டபாய கொழும்பில் இருந்து அறிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வன்னிப் பகுதியில் மக்கள் போராட்டங்கள் ஒன்றும் நடக்கக்கூட்டது என்றும், அவ்வாறு நடைபெறாமல் படையினர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சு ஊடாக கோட்டபாய யாழ் மற்றும் வன்னி கட்டளைத் தளபதிகளுக்கு பிரத்தியேகமாக அறிவித்துள்ளாராம். இதன் காரணமாகவே சமீபத்தில் காணமல் போனவர்களின் பெற்றோர் நடத்தவிருந்த போராட்டத்தை இலங்கை இராணுவத்தினர் கடுமையாக எதிர்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானம் பிசுபிசுத்துப்போயுள்ளது. காரணம் இலங்கை அரசானது இம்முறை அமெரிக்காவை எதிர்க்கவில்லை. மாறாக காலில் வீழ்ந்துவிட்டது. இதனையடுத்து அமெரிக்கா தனது தீர்மானத்தில் மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டுவந்து, இத் தீர்மானத்தை இலகுவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஜெனீவா அமர்வுகள் முடியும்வரை, வட கிழக்கில் மக்கள் போராட்டம் எதுவும் நடைபெறக்கூடாது என்பதில் கோட்டபாய மிகவும் கவனமாக உள்ளாராம்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4663
Geen opmerkingen:
Een reactie posten