தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மலேசியா ஆதவளிக்கக் கூடாது: சுவராம் அமைப்பு


ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேணைக்கு மலேசியா ஆதரவளிக்க வேண்டும் என மலேசியாவின் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த விடயத்தில் மலேசியா குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு இடையிலான யுத்தத்தில் இலங்கையில் 10,000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் சிலர் இன்னும் முகாம்களில் வசிக்கின்றனர்.
இலங்கை மனித உரிமை மேம்பாட்டு விடயங்களில் திருப்தி அடைய முடியாது என ஐநா மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கையில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்குப் பின்னர் புதிதாக முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் இவ்வாறான இன்னல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மலேசியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாதெனவும் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 8 முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளதாவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryDTdNYjv7.html


ஜெனிவா விவாதத்தில கலந்து கொள்ள முலாயம் சிங் யாதவ் தலைமையிலான இந்தியக் குழு நியமனம்!
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 07:51.29 AM GMT ]
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான இந்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கு இந்திய சமாஜவாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமை வகிக்கிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட இந்த பிரரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகளும், இந்திய எதிர்கட்சிகளும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன.
எனினும் தாம் தமிழர்களையோ, அல்லது இலங்கை அரசாங்கத்தையோ நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில், முலாயம் சிங் யாதவ் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryDTdNYjv6.html

Geen opmerkingen:

Een reactie posten