பரப்புங்கள் பகிருங்கள் தமிழா
மாணவர் எழுச்சியே தமிழின் தமிழ் இனத்தின் மீட்சி இந்தியனாக இருந்தது போதும் தமிழனாக நிமிர்வோம்
உலகுக்கு எடுத்து கூறு நாம் அடிமை அல்ல உலகை ஆண்ட இனம் மூத்த குடி உலகின் என்பதை ....
மாற்றான் காலில் மண்டியிட்டு வாழ்வதா உரிமையோடு எமது மண்ணில் தமிழனாக வாழ்வதா என்று
அனைத்து மாணவர்களும் ஒன்றாகி எழுவது இன்றைய தேவை ...உங்களால் மட்டுமே இந்த இனத்தின் சாபக் கேட்டை போக்க முடியும் அனைவரும் வாருங்கள் தமிழகமே கொதிக்கட்டும் சுதந்திர தமிழீழம் தமிழ் கொண்டு ஆட்சி புரியட்டும் தமிழர் நாம் நெஞ்சை நிமிர்த்தி தரணியில் பவனி வருவோம்
திராவிட எச்சம் நீங்கி தமிழின அடையாளம் பிறக்கட்டும் தமிழ் மண்ணில்
நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்டம். செய்திகளை முடிந்தவரை பரப்பவும்
--------------------
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சில கோரிக்கைகளை வைத்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று காலை முதல் மாலை வரை கல்லூரியினுள் நடத்தினர், ஆனால் காவல்துறை கெடுபிடி காரணமாக இரவு சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது
நள்ளிரவு என கூட பார்க்காமல் தமிழ் ஆர்வலர்கள் கோயம்பேடில் குவிந்து வருகின்றனர், ஊடகங்களும் நள்ளிரவே படையெடுக்க ஆரம்பித்துவிட்டன, இன்று காலை முதல் நிறைய கல்லூரி மாணவர்களும் பங்கேற்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளது, அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் வெற்றி பெற நாம் துணை நிற்ப்போம்
மாணவர்கள் ஆரம்பிக்கும் போராட்டம் பல சாம்ராஜ்ஜியங்களை புரட்டி போட்டதாகத்தான் சரித்திரம் பதிவு செய்துள்ளது. இப்போராட்டத்தில் உண்ணாநிலையை மேற்கொள்ளும் என் உடன் பிறவா தம்பி பிரியன் உள்ளிட்ட எட்டு பேருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்கள்
--------------------
கோரிக்கைகள்:
1.இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
2.சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் ,
3.இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
4.உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
5.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

Geen opmerkingen:
Een reactie posten