இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுவாரம் இன்று ஆரம்பித்துள்ளது. வடமாகாணசபை
உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் இன்று
நினைவுச்சுடரேற்றி நினைவுவாரத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை
சிவாஜிலிங்கம் தலைமையில் நடந்த நிகழ்வில், வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர்
அன்ரனி ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், உள்ளூராட்சிபை உறுப்பினர்
சஜீவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி யுத்தத்தில்
கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் நினைவு வாரத்தை இன்று (12)
தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுட்டிக்கும் அழைப்பை சிவாஜிலிங்கம்
விடுத்திருந்தார்.
கொல்லப்பட்ட மக்களிற்கு அஞ்சலி செலத்தும்
விவகாரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விவகாரமாக மாற்றமடைந்துள்ள
நிலையில், இன்று காலையில் சிவாஜிலிங்கம் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி வாரத்தை
ஆரம்பித்து வைத்துள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten