[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 05:41.22 AM GMT ]
பிரஜைகள் உரிமை அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதன்படி சுயாதீன நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
19வது திருத்தச் சட்டத்தின்படி பதவிகளுக்கு தகுதியுடையவர்களும், பொறுத்தமானவர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என பிரஜைகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
18வது திருத்தத்தின் பின் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்திருந்த நிலையில், 19வது திருத்தின் பின் சுயாதீன, பரிசுத்தமான நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அனைவரதும் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெற்று 20ம் திருத்தச் சட்டம் மற்றும் தகவல் அறியும் சட்டம் என்பவற்றை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரஜைகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி? திடுக்.தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 06:10.37 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்ற முக்கிய நீதியரசர் ஒருவரின் கணவரின் வைத்திய செலவிற்காக 2 மில்லியன் அனுமதித்து காசோலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதியரசர் ஈவா வனசுந்தர எனவும், இது தொடர்பிலான தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காசோலை எழுதப்பட்ட போதிலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய காரணத்தினால் அந்த பணத்தை உச்ச நீதிமன்ற நீதியரசரால் பெற்று கொள்ளமுடியாது போயுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் நீதிமன்ற நீதியரசர் சட்டக்கல்லூரியில் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றாக கல்வி கற்றவர் எனவும்,
சட்டக்கல்லூரியில் ராஜபக்சவின் அனுமதியை முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்கவின் விசேட சிபாரிசின் மூலம் அனுமதி பெற்றவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நீதியரசர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவையாற்றிய போது மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறிப்பிட்ட நீதியரசர் பதவிக்கு மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரே கோத்தபாய ராஜபக்சவின் கைது நடவடிக்கையை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவிற்கு காரண கர்த்தாவென்றும் இவர் முன்னாள் ஜனாதிபதி செய்த உதவிக்கு நன்றி கடனாகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக நீதியை நிலைநாட்ட அனைவரும் குரல் கொடுங்கள்!
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 06:40.28 AM GMT ]
யுத்தத்தால் அவலப்பட்ட மக்கள் இப்போது வேறு வகையான அவலங்களை சந்தித்துள்ளனர். யுத்த காலத்திலும் அதனை அடுத்த காலப்பகுதியிலும் யுத்த அனர்த்தத்தின் தாக்கங்கள் இருந்து வந்துள்ளன.
எனினும் இப்போது எங்கள் இளைஞர்களின் நடத்தை சார் விடயங்கள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுவில் யுத்தம் நடந்த பூமியில் சந்தர்ப்ப சூழல்களாலும் திட்டமிடப்பட்ட ரீதியிலும் சமூகப் பிறழ்வுசார் பிரச்சினைகள் எழுகை பெறுவது வழமை.
இது யுத்தம் நடந்து முடிந்த நாடுகளில் உணரப்பட்ட அனுபவம். இந்த அனுபவத்தை எங்கள் மண்ணும் வழங்கத் தவறவில்லை.
இளைஞர்களிடையே சர்வசாதாரணமாகிப் போன மதுப்பாவனை, புகைத்தல் என்பன குடும்ப கட்டுமானங்களை உடைத்து எறியக்கூடியவை.
இத்தகையதொரு சூழமைவில் போதைப் பாவனை நம் மண்ணில் மலிவுறத் தொடங்கிற்று. இதன் காரணமாக சமூக அனர்த்தங்கள் மலிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பொதுவில் பெண்களுக்கான அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதைக் காணமுடிகிறது.
பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுகின்ற பெண்பிள்ளைகளை பின் தொடர்கின்ற இளைஞர்களின் தொல்லையால் படிப்பு வேண்டாம் வீட்டில் இருந்தால் போதும் என்ற பழைய நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பெற்றோர்கள் உள்ளனர்.
இதுதவிர இரவு எட்டு மணி வரை இயங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பற்ற செயல்களால் பெற்றோர்கள் ஏங்கி இடிவிழுந்து போயுள்ளனர்.
இரவு வேளையில் கற்பிக்கப்படுகின்ற தனியார் கல்வி முறைக் கலாசாரத்தால் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இரவு நேரத் தனியார் கல்வி நிறுவன கற்பித்தல் முடிந்த பின் துவிச்சக்கரவண்டியில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனது பெண் பிள்ளையைக் கூட்டிச் செல்லும் ஒரு தந்தையின் மனநிலையை உணர்வது யார்?
கூட்டாக மதுபோதையில் வருகின்ற இளைஞர் குழுமத்தின் சேட்டைத் தொந்தரவில் இருந்து தனது பிள்ளைக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அந்த அப்பாவித் தந்தை அடையும் ஏக்கம் சாதாரணமானதன்று.
என்ன செய்வது? பணம் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்ட சமூக உருவாக்கத்தின் பொறுப்பற்ற செயல்களால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது.
எதுவாயினும் ஒரு காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை சமூகமே பொறுப்பு எடுத்திருந்தது. ஒரு பெண் பிள்ளை மீது இளைஞன் ஒருவன் சேட்டை செய்வானாயின் அங்கே கூடியிருப்பவர்கள் திரண்டு அவனைத் தண்டிப்பர்.
இந்தச் சமூகப் பொறுப்பு பெண்பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு குறித்த இளைஞர்களை வழிப்படுத்துவதாகவும் இருந்தது.
ஆனால் இன்று எது நடந்தாலும் நமக்கு என்ன? என்ற சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை எல்லோரையும் பாதிப்பதால் சமூக நீதியை, சமூகப் பொறுப்பை நிலைநாட்ட நாம் அனைவரும் குரல் கொடுப்பது கட்டாயமானதாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyFSdSUhsyE.html
Geen opmerkingen:
Een reactie posten