ஐரோப்பிய நாடுகளில் அகதிகளை அனுமதிப்பது தொடர்பாக ஐ.நா சபை பரிந்துரை செய்துள்ள சராசரி விகிதத்திற்கும் அதிகமாக சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தற்காலிகமாக தஞ்சம் கோரி வருபவர்களை ஐ.நா சபையில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொரு நாடும் சராசரியாக 45 சதவிகிதத்தினருக்கு தற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா சபை பரிந்துரை செய்துள்ளது.
இதன் அடிப்படையில், 2014ம் ஆண்டு சுவிஸில் தற்காலிகமாக குடியேற சுமார் 71 சதவிகித அகதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சதவிகிதமானது, ஐ.நா சபை பரிந்துரை செய்துள்ள சராசரி 45 சதவிகிதத்தில் 21 சதவிகிதம் கூடுதல் ஆகும்.
ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கு தற்கால அனுமதி வழங்குவதில் பல்கேரியா -94, சுவீடன் -77, சைப்ரஸ் -76, மால்டா -73 என்ற சதவிகிதத்தில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், சுவிஸில் தற்காலிக அனுமதி பெற்றுள்ளவர்கள் அந்நாட்டில் நிரந்தரமாக குடியேற முடியாது.
கடந்தாண்டு 15,575 அகதிகளை தற்காலிகமாக அனுமதி செய்திருந்தாலும், இவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு தான் சுவிஸின் அகதிகளுக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சுவிஸ் அகதிகள் என்ற தகுதியை வழங்கப்படவில்லை. சுமார் 43 சதவிகித நபர்களுக்கு அவர்களின் உடல்நலம் கருதி மனிதாபிமான அடிப்படையில் தான் தற்காலிக தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 17 சதவிகிதத்தினர் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பி போக அச்சம் தெரிவித்ததால், அவர்களுக்கு பிறவகையான பாதுகாப்பு அம்சங்களுடன் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten