[ திங்கட்கிழமை, 25 மே 2015, 07:47.00 AM GMT ]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றுள்ளார்.
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்த வழக்கின் முதல் தரப்பான கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வது குறித்து இன்னமும் இறுதி முடிவெடுக்கவில்லை. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் கர்நாடகா அரசு ஜூன் 1-ந் தேதிக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் தாம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் 11-5-2015 அன்று வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்மக் குமார் ஆகியோர் கர்நாடகா அரசுக்கு தெளிவாகப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
குறிப்பாக ஆச்சார்யா, இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான சட்ட முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றே அந்த அரசுக்கு ஆணித்தரமாகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கியமான ஊடகங்களும், சட்டவல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
கர்நாடகா மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா மாநில அரசு உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
தொடக்கத்தில் இந்த வழக்கினைத் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமியும் இந்த வழக்கில் தானே மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கினில் பங்கேற்க திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உரிமை என இரண்டு முறை உச்சநீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மேல்முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-file-appeal-against-jayalalithaa-acquittal-227426.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-file-appeal-against-jayalalithaa-acquittal-227426.html
பிரித்தானிய விசா விண்ணப்ப மோசடி! யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது!
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 10:06.37 AM GMT ]
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள் மற்றும் குடிவரவு பிரிவினரால் நுழைவிசைவு விண்ணப்பதாரி கொழும்பிலுள்ள மோசடி புலன்விசாரணை பணியக காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதே பெயருடன், வேறுபட்ட பிறந்த திகதி மற்றும் குடும்ப விபரங்களை உபயோகித்து ஐக்கிய இராச்சியத்துக்கான ஒரு நுழைவிசைவுக்கு அவர் விண்ணப்பித்த போது ஏற்கனவே அவருக்கு அது மறுக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரிக்கு நுழைவிசைவு விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன் அவர் ஐக்கிய இராச்சியத்துக்கு 10 வருட கால பிரயாணத்தடையையும் கொண்டிருப்பார்.
இதற்கு மேலதிகமாக தனது நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கைகளையும் அவர் எதிர்கொள்வார்.
இதேவேளை ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு விதிகளின் துஷ்பிரயோகித்தலை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள் மற்றும் குடிவரவு செயற்பாடுகள் முகாமையாளர் டொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகங்களை காணும் இடத்தில் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களில் ஒளிவுமறைவின்றியும் மற்றும் நேர்மையாகவும் இருப்பதற்கு நாம் கடுமையாக அறிவுறுத்துகிறோம்.
சகல விண்ணப்பங்களும் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படுமென்பதுடன் முன்னர் நுழைவிசைவு மறுக்கப்பட்டமை புதிய நுழைவிசைவு விண்ணப்பமும் மறுக்கப்படும் என்பதை அவசியம் கருதவில்லை.
எவ்வாறெனினும் ஏமாற்றும் அல்லது மோசடி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன் இச்சம்பவத்தில் இடம்பெற்றதை போன்று பரந்ததான விளைவுகளும் இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நுழைவிசைவு விண்ணப்பங்களும் மோசடி தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகளால் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுமென்பதுடன்,
இந்த ஏமாற்று மோசடி இந்த கிரமமான சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும்... இனப்படுகொலை: சென்னையில் இடம்பெற்ற கருத்தரங்கு
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 10:35.30 AM GMT ]
முதல் அமர்வு காலை 10 மணி முதல் 2 மணி வரையிலும், இரண்டாமாவது அமர்வு மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றது.
காலை அமர்வில் தோழர் பூங்குழலி, இரா. அருள் பசுமைத்தாயகம், விவேகானந்தன் மே 17 இயக்கம், செந்தில் இளந்தமிழகம் இயக்கம், வழக்குரைஞர் அங்கயற்கண்ணி, வழக்குரைஞர் செயப்பிரகாசு தமிழர் முன்னணி, க. இராசா ஸ்டாலின் முருக சேனை, அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம், சூரியப் பிரகாசு உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாலை அமர்வில் கவிஞர் காசி ஆனந்தன் இந்திய- ஈழத்தமிழர் நட்புறவு மையம், சி. மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட், பேராசிரியர் மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகம், தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம், கோவை இராமகிருட்டிணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
வன்னி அரசு விடுதலை சிறுத்தைகள், பொழிலன் தமிழக மக்கள் முன்னணி, இயக்குனர் புகழேந்தி , கே.எம்.ஷெரிப் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, நா. வைகறை தமிழ்த் தேசிய பேரியக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyFRZSUhw1G.html
Geen opmerkingen:
Een reactie posten