[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 02:27.39 PM GMT ]
இலங்கை பிரஜை ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 4 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானிய நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் அந்நாட்டு பெண் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் இடைநிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான குற்றச்சாட்டில் பிழையை ஏற்றுக்கொண்ட இலங்கை சாரதி ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஏழு நாட்களும் 12 மணித்தியால இரவுநேரப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த இலங்கையர் செலுத்திய வேன் வீதியை விட்டு விலகி பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகன சாரதி மிகவும் களைப்படைந்தமையே விபத்திற்கு காரணம் என பிரித்தானியாவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களில் 20 வீதமானவை தூக்கமின்மை காரணமாக இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் எரிபொருளுக்கு தடை!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 12:55.53 PM GMT ]
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, யாழ்.நீதிமன்றம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கடந்த 20ம் நாள் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வடபகுதிக்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது.
எரிபொருள் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவின் பேரிலேயே, அனுராதபுரத்தில் எரிபொருள் தாங்கிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten