தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 mei 2015

கோட்டபாயவுக்கு வைத்த ஆப்பா இல்லை புலம்பெயர் தமிழர்களுக்கு வைத்த அப்பா ?

காவியக் காதல் ஆரம்பம்: ஜோன் கெரி "ஜோரா" என்ன செய்யப்போகிறார் என்பது தெரிகிறது !

[ May 02, 2015 02:49:31 PM | வாசித்தோர் : 13930 ]
இன்று காலை தனி விமானம் ஒன்றில் கொழும்பு சென்றுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை மங்கள சமரவீர வரவேற்றுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கிய ஜோன் கெரி அப்படியே ஒரு காதலியைப் பார்த்தது போல முகம் மலர்ந்தார். உடனே பதிலுக்கு மங்கள சமரவீரவும் புன்னகைத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமலே பேசிக்கொண்டார்கள்(கண்களால்) .
அவர் சிறிசேன , ரணில் மற்றும் சம்பந்தன் ஆகிய மூவரையுமே சந்திக்க உள்ளார். அதுபோக அவர் எந்த தமிழ் பகுதிகளுக்கும் விஜயம் செய்ய மாட்டார் என்று அறியப்படுகிறது. மேலும் சிங்களப் பகுதியில் உள்ள புத்தவிகாரை ஒன்றுக்குச் சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு அப்படியே வந்த சொகுசு விமானத்தில் திரும்பிச் செல்லவுள்ளார். அமெரிக்காவின் செல்லப் பிள்ளை ரணில் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் , அவரைப் பார்த்து பாராட்டவும் , உலகத்திற்கு தாம் இலங்கைக்கு சப்போட்டாக இருக்கிறோம் என்று காட்டவுமே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இது தவிர எந்த ஒரு முக்கியமான நிகழ்வோ இல்லை பேச்சுவார்த்தைகளோ இடம்பெறவில்லை. அதுபோக அமெரிக்க தூதரக கட்டடம் ஒன்றுக்கு ஜோன் கெரி அடிக்கல் நாட்டுகிறார். அவ்வளவு தான் மேட்டர். பின்னர் நாளை காலை 11.00 மணிக்கு மீண்டும் விமானத்தில் ஏறி சர்-எனப் பறந்துவிடுவார். அவரைப் பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளை பார்வையிட அவருக்கு நேரம் இல்லை. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் விதவைகள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்கவேண்டும் என்று சர்வதேச சமூகம் பல அழுத்தங்களை கொடுத்து வருகிறது. இருப்பினும் ஜோன் கெரியை பொறுத்தவரை அவர் கடுமையான புலிகள் எதிர்பாளர்களில் ஒருவர். அவர் பார்வையில் தமிழ் மக்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பது தான் முக்கியமான விடையமாக உள்ளது எனலாம்.
http://athirvu.com/newsdetail/3102.html

மகிந்த அதே எகத்தாளத்தோடு இருக்கிறார்: மைத்திரி சென்று பார்கும்அளவு நிலமை உள்ளது !

[ May 02, 2015 02:58:00 PM | வாசித்தோர் : 18720 ]
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , மைத்திரி மற்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு இடையே நடக்கவிருந்த சந்திப்பு ஒன்று இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது. மகிந்தரருக்கு நேரம் இல்லை என்றும் அதனால் அவர் மைத்திரியை சந்திக்க முடியாது என்று மகிந்த தரப்பு கூறி மைத்திரியை அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் அதனையும் பெருந்தன்மையாக மைத்திரி ஏற்றுக்கொண்டார். தற்போது(நேற்றைய தினம்) மகிந்த ராஜபக்ஷ இபோது ஃபிரியாக இருப்பதாகவும் வேண்டும் என்றால் மைத்திரி சந்திக்கலாம் எனவும் மகிந்த தரப்பு மைத்திரியின் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
இதற்கு மைத்திரி சரி அப்படி என்றால் நானும் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் ஒரு நாட்டு ஜனாதிபதியை தான் விரும்பிய நேரம் தான் மகிந்த சந்திக்கிறார் என்றால் எப்படியான ஒரு எகத்தாளத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது என்கிறார்கள் மைத்திரிக்கு நெருக்கமானவர்கள். ஆனால் மைத்திரியோ அனியாயத்துக்கு நல்லவராக இருக்கிறாரப்பா என்று பலரும் பேசுகிறார்கள் பலர்.
http://athirvu.com/newsdetail/3103.html


கோட்டபாயவுக்கு வைத்த ஆப்பா இல்லை புலம்பெயர் தமிழர்களுக்கு வைத்த அப்பா ?

[ May 02, 2015 02:29:38 PM | வாசித்தோர் : 14315 ]
சில தினங்களுக்கு முன்னர் இலங்கைப் பாராளுமன்றில் , 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கோட்டபாய மற்றும் பசில் போன்ற நபர்கள் அரசியலில் ஈடுபடாமல் தவிர்க்கவே அவசர அவசரமாக கொண்டுவந்தோம் என்று சிங்கள தலைமைகள் கூறுகிறது. அதனை அப்படியே தமிழ் ஊடகங்களும் வரிந்துகட்டிக்க்கொண்டு தமிழாக்கம் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர்களும் இனி இலங்கை சென்று அரசியலில் ஈடுபட முடியாது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா ?
இலங்கையில் தற்போது ஆயுதப்போராட்டம் இல்லை. அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க , புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பழைய அரசியல்வாதிகள் விரும்பினால் கூட இனி அவர்கள் இலங்கை சென்று அரசியலில் ஈடுபட முடியாது. இச்சட்டம் உண்மையில் கோட்டபாயவை குறிவைத்தா ? இல்லை மறைமுகமாக புலம்பெயர் தமிழர்களை குறிவைத்தா நிறைவேற்றப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இனி கோட்டபாய அரசியலில் இறங்க முடியாது , என்று கூறி தமிழர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களின் நிலை என்ன என்பதனை யோசிக்க மறந்துவிட்டார்கள் போல் உள்ளது.
அதுபோக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனும் இனி மிகவும் ஜாலியாக இருப்பார். உள்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் அரசியல் செய்ய முடியும். எங்கே வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் எவராவது வந்து அரசியலில் குதித்து தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவர் இனி கவலைகொள்ளத் தேவையில்லை அல்லவா !
http://athirvu.com/newsdetail/3101.html

Geen opmerkingen:

Een reactie posten