ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் வெளிநாட்டு அகதிகள் குறித்து ஐ.நா சபை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்களுக்கு சுவிஸ் அரசு ஆதரவு அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற வரும் வெளிநாட்டு அகதிகள் அபாயத்தில் சிக்கி இறக்க நேரிடுவதை தடுக்கும் நோக்கில் ஐ.நா சபை சமீபத்தில் புதிய திட்டங்களை வகுத்து வெளியிட்டது.
இந்த திட்டங்களின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
இதற்காக, அடுத்த இரண்டு வருடங்களில் சுமார் 20 ஆயிரம் அகதிகளை தெரிவு செய்து, அவர்களை ஐரோப்பிய நாடுகளில் குடியமர்த்த, தொடர்புடைய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா சபையின் இந்த திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு தெரிவித்து பாராட்டியுள்ளது.
சுவிஸின் அதிபரும், நீதித்துறை அமைச்சருமான Simonetta Sommaruga நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அகதிகளை அபாயத்திலிருந்து மீட்போம், அவர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவோம் என வெறும் வார்த்தைகளால் பேசுவதை விட, அதை நடைமுறையில் செயல்படுத்தி காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அகதிகள் குறித்து ஒரு பொதுவான தீர்வை ஏற்படுத்துவது சுவிஸ் அரசின் கடமை என்றும், இதற்கான சர்வதேச ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசு ஐரோப்பிய ஐக்கிய கூட்டணி நாடுகளில் உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை என்றாலும் கூட, அகதிகள் குறித்தான பிரச்சனைக்கு உதவ தனது நாட்டின் பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சிரியாவை சேர்ந்த 3,000 அகதிகளுக்கு சுவிஸில் குடியேற அனுமதி வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதன் மூலம் பிற நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என Simonetta Sommaruga கூறியுள்ளார்.
http://www.coolswiss.com/view.php?22eOld0bcaa0Qd4e3eMC302cBnB3ddeZBnf303egAA2e4M0asacb2lO443
|
Geen opmerkingen:
Een reactie posten