தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 mei 2015

மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!



வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக ரொஹிங்கியா மற்றும் வங்கதேசத்தை மக்கள் பலர் மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்கின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கள் நாட்டில் எல்லைகளில் எந்த விதமான சட்டவிரோத மனித முகாம்களும் கல்லறைகளும் இல்லை என்று மலேசிய அரசாங்கம் இதுவரை கூறி வந்தது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள படாங் பெசார் மற்றும் வாங் கெலியன் பகுதிகளில் உள்ள காடுகளில் ஏராளமான அகதிகளில் கல்லறை இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக மலேசிய அரசாங்கம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும் கடத்தல் தடுப்புசட்டத்தின் கீழ் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திதாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்த ஊதியத்திற்காக மலேசிய நாட்டுக்கு ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்கள் கடத்தி வரப்பட்டனர். இதை மலேசிய அரசாங்கமும் தடுக்கவில்லை.
இந்நிலையில் இவ்வாறு கடத்தி வரப்படுபவர்கள் பலரை காடுகளிலும் கடலில் உள்ள படகுகளிலும் கடத்தல்காரர்கள் அடைத்து வைத்து அவர்களின் குடும்பத்தினர் இடமிருந்து பெருந்தொகை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் தாய்லாந்து அரசாங்கம் தங்கள் நாட்டுக்கு இவ்வாறு மனிதர்களை கடத்திவருவதை கைவிடவேண்டும் என கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் தங்கள் கடல் எல்லையில் உள்ள அவர்களது படகுகளையும் திருப்பி அனுப்பியது.
ஆனால் சர்வதேச அளவில் எழுந்த கண்டனங்களுக்கடுத்து மலேசியா மற்றும் இந்தோனோசியா நாடுகள் தங்களின் கொள்கைகளை மாற்றிஅமைத்தது.
இந்நிலையில் மலேசிய கடல் எல்லையில் தவித்துவருகின்ற 6000 மக்களை மீட்க வேண்டும் என அந்நாட்டு கடற்படைக்கு பிரதமர் நாஜிப் ரசாக் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கவும் மலேசியா சம்மதம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வருபவர்களுக்கு அவர்கள் தங்குவதற்கான தற்காலிக முகாம்கள் அமைப்பது தொடர்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் தீவிரமாக யோசனை செய்துவருகின்றன. இந்த முயற்சிக்கு உதவுவதாக அமெரிக்காவும் உறுதியளித்துள்ளது.
ஆனால் இவ்வாறு தற்காலிக முகாம்கள் அமைப்பது மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து எராளமானோர் வெளியேறுவதற்கு வழி வகுக்கும் என்று தாய்லாந்து கவலை தெரிவித்துள்ளது.
மேலும் தாய்லாந்தின் புக்கெட் தீவில் தற்காலிக முகாம் அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையையும் அது நிராகரித்துள்ளது. இம்மாதத்தின் தொடக்கத்தில் மனித கடத்தல் சம்பவம் தொடர்பாக 46 பேரை தாய்லாந்து பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten