தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 mei 2015

புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்க தொகை சம்பந்தமான ஆவணங்கள் எரியூட்டப்பட்டுள்ளன

விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திறைசேரிக்கு வழங்கிய போது திறைசேரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆலோசனையின்படி எரியூட்டப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இந்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான எந்த ஆவணங்களும் இராணுவத்திடம் இல்லை.
ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலைப் புலிகளிடம் இருந்து எவ்வளவு தொகை பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிய நடைமுறைகளின் அடிப்படையில் அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்.
புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் பணம் என்பன சுமை ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தில் 310 டொன் தங்கத்தை ராஜபக்சவினர் இரகசியமான முறையில் ஜப்பானுக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும் பலமிக்க சக்தி ஒன்று தலையிட்டு அந்த விசாரணைகளை நிறுத்தியதாக திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் கேட்டபோது மேற்படி விடயம் பற்றி எதனையும் தன்னால் கூற முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளரிடம் அது பற்றி கேட்குமாறும் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten