ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களைக் கடத்துகின்ற
கிரிமினல் குழுக்களை முறியடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள்
சபையின் உதவியைக் கோரியுள்ளது.
உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஐநா
உதவி செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான
தலைவர் பெடறிக்கா மொகறினி தெரிவித்தார். ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக
படைப்பலத்தைப் பிரயோகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் பற்றி அவர்
பாதுகாப்புச் சபையில் விபரித்தார்.
இவ்வாண்டில் மத்திய தரைக்கடலின்
ஊடாக ஐரோப்பிய நாடுகளை அடைய முனைந்த ஆயிரத்து 800ற்கு மேற்பட்ட புகலிடக்
கோரிக்கையாளர்கள் படகுகள் மூழ்கி உயிரிழந்தார்கள். 2014 ஆம் ஆண்டுடன்
ஒப்பிடுகையில் இது 20 மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும்.
|
Geen opmerkingen:
Een reactie posten