பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, இலங்கைக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உறுப்பினர்கள் இருவரின் தோல்வி, இலங்கைக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இவர்கள் தோல்வியடைந்தமை, பிரித்தானியாவில், விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு பாரிய பின்னடைவாகும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் நண்பர்களான ஜேம்ஸ் வார்ட்டன், அன்ட்ரூ ரொசின்டெல், மத்யூ ஒபோட், பொப் பிளாக்மன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றுள்ள லியம் பொக்ஸ்சும் கூட இலங்கையின் பலமான நண்பன். இதைவிட எமது சொந்த உறுப்பினராக ரணில் ஜெயவர்த்தனவும் வெற்றி பெற்றுள்ளார் என அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten