அமெரிக்காவில் இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உபயோகப்பொருள் கடை உரிமையாளராக இருந்த 52 வயதான மேதானந்த குருப்பு என்ற இலங்கையரே கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
12 News
முகமூடி அணிந்த நபர்கள் குறித்த நபரின் கடைக்குள் சென்று அவரைத் தாக்கியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் கடை உரிமையாளரான மேதானந்த குருப்பு கொல்லப்பட்டார். ஒரு சந்தேக நபரே இலங்கையர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இபியூமொன்ட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையரின் மார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்கள் இருவரின் முகமும் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான 19வயதான சன்லெர் கெய்ல் வென்டீஸ் (Chandler Kyle Ventress) பொலிஸாருடன் ஒத்துழைத்துள்ளார்.
செவ்வாய்கிழமை மாலை 5.45 அளவில் சரணடைந்த அவரிடம் புலனாய்வாளர்கள் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளதுடன், பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten