தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 mei 2015

பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் அகதிகள்: வெடிக்கும் சர்ச்சை !

ஜேர்மனியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டு அகதிகள் நுழைய தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Ingolstadt நகரில் Amadeus என்ற இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த இரவு விடுதிக்கு வரும் வெளிநாட்டு அகதிகள், பெண்கள் உள்ளிட்ட பிற நபர்களிடம் அநாகரீகமாக நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
அகதிகள் மீதான புகார்கள் குறித்து விசாரித்த இரவு விடுதியின் உரிமையாளரான Martin T, இனி இரவு விடுதிக்குள் வெளிநாட்டு அகதிகள் நுழைய தடை விதித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
உரிமையாளரின் இந்த அறிவிப்பு அகதிகள் மத்தியில் அவமானத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தடை குறித்து விளக்கம் அளித்த இரவு விடுதி உரிமையாளர், விடுதிக்கு வரும் கருப்பினத்தவர் உள்ளிட்ட பிற அகதிகள், அங்குள்ள பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்வதுடன், அவர்களின் உடமைகளை திருடும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், விடுதிக்கு வரும் அகதிகள் பெரும்பாலும் இலவசமாக மது அருந்துவதாகவும், அதனால் தான் இந்த தடையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
விடுதி உரிமையாளரின் இந்த கருத்து இனப்பாகுபாடு பார்ப்பது போல் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அகதிகளின் உரிமைகள் காப்பாளரான Hamado Dipama என்பவர் கூறுகையில், தடை குறித்து விடுதி உரிமையாளரின் விளக்கம் வெளிப்படையாக இனவெறியை தூண்டுவதாக உள்ளது என்றும் இந்த தடையை நீக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது நிர்வாகம் சார்ந்த பிரச்சனை இல்லை. இது உரிமையாளரின் ஒருதலை பட்சமான இனப்பாகுபாடு எண்ணம் தான் இந்த தடைக்கு காரணம்.
உரிமையாளரின் இரவு விடுதிக்குள் ஒரு ஜேர்மனி குடிமகன் மற்றொரு ஜேர்மனி பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டால், ஒட்டுமொத்த ஜேர்மனி ஆண்களும் விடுதிக்குள் நுழைய அவர் தடை விதிப்பாரா என Hamado Dipama கேள்வி எழுப்பியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten