தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 mei 2015

ரணிலிடம் இரகசிய வாக்குறுதி வழங்கினார் சுமந்திரன்: த.தே.கூ அமைச்சு பொறுப்புகளை !

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமையவுள்ள தேசிய அரசில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் பங்குபற்றி அமைச்சர் பதவிகளை பெறும் என கூட்டமைப்பின் தேசியபட்டியல் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.தே.க பிரதானிகளிற்கு உறுதியளித்துள்ளார். இதற்கு சிறியளவிலான எதிர்ப்பு கிளம்பலாமென்றும், ஆனால் அதனை சமாளித்து கூட்டமைப்பை அமைச்சு பொறுப்பு ஏற்கச் செய்வது தனது பொறுப்பு என உத்தரவாதம் வழங்கியுள்ளார். மிகமிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தீபம் இதனை உறுதி செய்துள்ளது. இதனுடன் தொடர்புபட்ட சில தரப்புக்களினூடாக விடயத்தை உறுதி செய்ததன் பின்பாக மிகுந்த பொறுப்புணர்வுடன் தீபம் இந்த தகவலை வெளியிடுகிறது.
சில வாரங்களின் முன்னர் சிங்கப்பூரில் நடந்த கலந்துரையாடல் ஒன்று குறித்த செய்திகள் இணையங்களில் பிரசுரமாகியிருந்தது. வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகிய அரசதரப்பினருடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன், புலம்பெயர்ந்தோர் அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சுரேன் சுரேந்திரன், கனடா, அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழர் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வது பற்றி பங்காளிக்கட்சிகள் எதற்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. சுமந்திரன் மற்றும் கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் தமிழ்மாறன் ஆகியோர் இரகசியமாக சென்று கலந்து கொள்வதென இருந்தது. எனினும், பேராசிரியரின் தனிப்பட்ட சில காரணங்களால் அவரால் செல்ல முடியவில்லை. சுமந்திரன் மட்டும் சென்று கலந்து கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பில் சுமந்திரன் மேற்படி வாக்குறுதியை வழங்கியிருந்தார். இதன் பின்னராக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் சென்று ரணிலை சந்தித்த சமயத்திலும் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள பங்காளிக்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமென்றும், எனினும் அவர்களின் எதிர்ப்பை சமாளித்துக் கொள்ளலாமென்றும், அதந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சுமந்திரன் வாக்குறுதி வழங்கியுள்ளார். எனினும், இந்த விடயத்தின் இரகசிய தன்மையை பேணிப்பாதுகாத்து கொள்ளும் பொறுப்பு ஐ.தே.கவை சாருமென்று கூட்டமைப்பு தரப்பு கறாராக கூறியுள்ளது. பொதுத்தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படியான தகவல்கள் மக்களை விசனம் கொள்ளும் என்பதால், எந்த காரணம் கொண்டும் தகவல் கசிந்தவிடாமல் பார்த்து கொள்ளவேண்டுமென கூட்டமைப்பின் இரண்டு தலைவர்களாலும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசியஅரசில் பங்குபெறும்பொழுது எந்தவகையான, எத்தனை அமைச்சுக்களை பொறுப்பேற்பது என்பதை பின்னர் பேசிக் கொள்ளலாமென இந்த கூட்டங்களில் இரண்டு தரப்பும் தீர்மானித்துள்ளன. மேற்படி தகவல்களை சுயாதீனமாக பெற்றுக்கொண்ட தீபம், பின்னர் தொடர்புடைய இரண்டு தரப்பு உயர்மட்ட தலைவர்கள் மூலம் உறுதி செய்து கொண்டுள்ளது.

http://athirvu.com/newsdetail/3105.html

Geen opmerkingen:

Een reactie posten