[ திங்கட்கிழமை, 18 மே 2015, 06:52.14 AM GMT ]
பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை பரம்பரையாக எனது குடும்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு எப்போதும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் கிடையாது எனவும் மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதனைத் தவிர தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்டமைக்கு எனது பரம்பரை சுதந்திர கட்சியை சேர்ந்ததல்ல எனவும் எனது தந்தை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயபுரத்தில் பிள்ளைகளின் நினைவாக கறுப்புக்கொடி கட்டிய தாயாரை தாக்கிய பொலிசார்
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 07:07.10 AM GMT ]
இன்று போரில் கொல்லப்பட்ட தன் பிள்ளைகளை நினைத்து கறுப்புக்கொடி கட்டி வணக்கம் செலுத்தி தன் துக்கத்தை வெளியிட்ட தாயாரை ஜெயபுரம் பொலிசார் தாக்கியதுடன், கொடியை கழற்றி எறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பா.உறுப்பினரிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தபோது பொலிசாரிடம் பா.உறுப்பினர் சி.சிறீதரன் பேசிய பின்பும் அந்த தாயாரின் வீட்டுக்கு சென்று தற்பொழுது ஜெயபுரம் பொலிசார் அவரை விசாரணை செய்து அச்சுறுத்தி வருகின்றனர்.
இலங்கை குறித்து ஐ.நா விசேட அறிக்கை
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 07:09.12 AM GMT ]
ஐ.நா அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 29வது அமர்வு எதிர்வரும் ஜுன் மாதம் 13ம் திகதி முதல் ஜுலை மாதம் 3ம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வருடாந்த அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளது.
இந்நிலையிலேயே இலங்கையில் கடந்தாண்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை சமர்பித்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பதவியேற்றதன் பின்னரான இலங்கை குறித்த அறிக்கையில், இடம்பெயர்வு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கின்றது எனவும்,
ஆட்சேர்ப்பு செயன்முறையின் போது துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான பல அனுபவங்கள் இலங்கை அகதிகளுக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் பொருளாதார மீளுருவாக்கம் முக்கியமாக காணப்பட்ட போதிலும், அதனை அகதிகள், உரிமைகளின் துருப்புச்சீட்டாக பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மிக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்பது உறுதி, அது வெறுமனே பதவியுயர்வுக்காக மாத்திரமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறுவதை தடுத்து அவர்களுக்கான தொழில்வாய்ப்பை பெற்று கொடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்,
தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கைகளை தடுக்க முடியும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கையில் வருமானம் உழைக்கும் வாய்ப்புக்களை தோற்றுவிக்கமுடியும்.
குறிப்பாக கிராமப்புறங்கள் உட்பட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களுக்கு இடம்பெயர்வு என்பது ஒரு தேவையை விட தேர்வாகவே காணப்படுகின்றது.
அதேநேரம் நாட்டைவிட்டு வேறுநாட்டிற்கு சென்று குடியேறுவது என்பது எந்தவொரு தனிப்பட்ட நபரினதும் மனித உரிமையாகும்.
இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமானது என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பிரான்சுவா கிரேபியோ தனது அறிக்கையில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கைக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyFScSUhr0C.html
Geen opmerkingen:
Een reactie posten