தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 mei 2015

லங்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை, கனடியப் பராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண்.



முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார்.
மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனவும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும், இலங்கை அரசு இன்னமும் படுபாதகமான மனிதவுரிமை மீறல்கள் குறித்த எந்நதவொரு முன்னேற்த்தையும் அடையவில்லையெனவும், கனடியத் தமிழர்கள் கனடாவின் கலாச்சார வரைபடத்தில் பல நல்ல மாறுதல்களை மேற்கொண்டுள்ளார்கள். அதுகுறித்து நான் பெருமையடைகின்றேன் எனவும் இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmtyFTaSUityA.html

Geen opmerkingen:

Een reactie posten