[ சனிக்கிழமை, 09 மே 2015, 09:51.42 AM GMT ]
அரச பொலிஸ் என்ற எண்ணக்கருவின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இவ் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் சீனாவின் செல்வாக்கு மழுங்கடிக்கப்பட்டு விட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் பொலிஸ் அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவது மிக முக்கியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே குறித்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இருக்கின்றது என்பதை இந்த பொலிஸ் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவை புறந்தள்ளிய இலங்கை
[ சனிக்கிழமை, 09 மே 2015, 10:06.47 AM GMT ]
சர்வதேச ஊடகமொன்று இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊருக்கு அருகாமையில் விமான நிலையத்தை கட்டுவதற்கு சீனா 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது.
அது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகும். மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் இரு வருடங்களின் பின்னர் விமான நேர அட்டவணையின்படி ஒரேயொரு விமானம் மாத்திரமே டுபாய் நோக்கி சென்றுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் ஏற்பட்ட இழப்பின் காரணமாக அவர் மனமுடைந்து விட்டார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் அவ்விமான நிலையத்திலிருந்து தனது விமான சேவையை இரத்து செய்து கொண்டது.
இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன அரச தலைவர்கள் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளான இலங்கையினதும், ஏனைய நாடுகளினதும் வளர்ச்சிக்காக பல வருடங்களை செலவிட்டனர்.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை வரையில் சீனா கப்பல் பாதைகள் அமைத்துள்ளது.
சீன அரசாங்கம் 6 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், துறைமுக திட்டங்களுக்காக 360 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியுள்ளது.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் துறைமுக நகரத்திட்டத்தை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்கியுள்ளார் எனவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் இரு நீர்மூழ்கி கப்பல்கள் கடந்த 2014ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை இந்தியாவை தோற்கடித்த சீனாவின் முதல் வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துறைமுக நகரத்திட்டம் சூழல் விதிகளின் பாதுகாப்பை மீறியது மற்றும் ஊழல் இடம்பெற்றது என தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால கொழும்பு துறைமுக நகர திட்ட அபிவிருத்திகளை இடைநிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் காரணமாக சீனா வாய்ப்பை இழந்து விட்டது என இலங்கையின் கூட்டு நிறுவனமான ஹேலிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளியலாளர் டிஷால் டி மெல் தெரிவித்துள்ளார்.
குறித்த விமான நிலையம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது இதற்கு முதல் உதாரணம் குறித்த விமான நிலையத்திற்கு இரு முறை நிதியுதவி வழங்கியமையாகும்.
இராணுவச்சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்தது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்றம்!
[ சனிக்கிழமை, 09 மே 2015, 10:29.56 AM GMT ]
சக இராணுவ வீரரை சுட்டுக்கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவச்சிப்பாய்க்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் ஊடாக சீனா கொண்டிருந்த ஆதிக்கத்தை அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு மே-14 ஆம் திகதி சாவகச்சேரி – கச்சாய்ப் பகுதியின் இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரைக் கொன்றதாக அதே முகாமைச் சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று ஆலோசனைக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு நேற்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி மன்றிற்கு வழங்கிய சாட்சியத்தின் மூலம் எதிரியால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏற்படுத்தப்பட்ட காயம் உடனடியாக மரணத்தினை ஏற்படுத்தியுள்ளமை தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது.
சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிரியைக் குற்றவாளியாக நிரூபிக்கின்றன. எனவே மன்று எதிரியைக் குற்றவாளியாகக் கருதி மரண தண்டணை விதிக்கப்படுகிறது என நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியான் சேலாகே பிரியந்த திசநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய்க்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்ட இலங்கை: இந்திய ஊடகம்
[ சனிக்கிழமை, 09 மே 2015, 10:40.28 AM GMT ]
இந்திய ஊடகமொன்று இது தொடர்பிலான செய்திகளை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடற்பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி, பதில் பேச்சாளர் ஜெப் ரத்தே அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்து சமுத்திரத்தை பலவந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக இலங்கை செயற்படும் எனவும், அதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர் இலங்கையை பயன்படுத்தி சீனா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்தது.
எனினும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,
அமெரிக்கா அதனை பயன்படுத்திக் கொள்வதாகவும் குறித்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீனாவின் இந்து சமுத்திர பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சர்வதேச ரீதியிலான பொறுப்புக்கூறல்கள், கடற்கொள்ளைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பேரழிவு மேலாண்மை என்பவற்றில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten