தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 mei 2015

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை யார் கொண்டாடுவார்கள்?

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது பலதரப்பட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஒரு பெரும் சாதனையாக புகழப்படுகிறது.
இலங்கை சமாதானத் தூதர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முதல், சிங்கள தேச இடது மற்றும் வலது சாரி கட்சிகளின் தலைவர்கள் வரை இந்த ஆட்சி மாற்றத்தை புகழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி வெற்றியானது, இலங்கை நாட்டிற்கு தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கி தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
மேலும், இந்த ஆட்சி மாற்றமானது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இதன் மூலம் சமுதாயத்தில் உயரத்தில் உள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தால் நசுக்கப்பட்டவர்கள் கூட கொடுங்கோல் ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து விட முடியும் என்பதையே இந்த அரசியல் மாற்றம் காட்டுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது, சர்வதேச மற்றும் பிராந்திய அதிகாரங்களை உள்ளடக்கிய நடுநிலை முதலீட்டாளர்களின் பார்வையில் இது நன்மை பயக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை முறியடித்தது மட்டுமில்லாமல், அமெரிக்க மற்றும் இந்திய அரசியல் நலன்களை மீறி இந்திய பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு எளிதாக நுழைய வழிவகுத்த மஹிந்தவின் நடவடிக்கைகளையும் ஒழித்துக்கட்டியது.
மேலும் யதார்த்தமாக கூற வேண்டும் என்றால், இந்த புதிய ஆட்சி மாற்றத்திற்கு சிங்கள கடும்போக்கு கட்சியான ஜே.வி.பி ஆதரவு அளித்துள்ளது. 
அதே நேரத்தில், ஜாதிக ஹெல உறுமய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் கடும்போக்காளர்கள் இந்த புதிய ஆட்சி அமைய துணையாக இருந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பார்த்தால், புதிய ஆட்சியானது சிங்கள அரசியலில் உள்ள அனைத்து முக்கிய தேசியவாத சக்திகளை கொண்ட ஒரு கூட்டணி அரசாங்கம் போன்றொரு வெளிப்படையான தோற்றத்தை தருகிறது. 
ஆயினும்கூட, இந்த பரந்த கூட்டணியானது நோர்வே நாட்டு முன்னால் அமைதி மத்தியஸ்தர் மற்றும் மேற்கத்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் இந்த புதிய அரசாங்கத்தை புகழ தூண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இது இலங்கை மக்களால்/ மக்களுக்காக நிகழ்த்தியுள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனை என மேற்கத்திய அதிகாரிகள் புகழ்கிறார்கள்.
இதன் எதிரொலியாக, கூட்டாச்சி அமைப்பு மற்றும் அதிகார பகிர்வு குறித்து ஈழத்தமிழர்களின் வசதிகளை கருத்தில்கொண்டு நாட்டின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமை ஆகியவற்றில் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்துக்கொள்ள முடியாது என புதிய அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திய 6வது சட்ட திருத்தமானது தேசியவாதம், சுயநிர்ணயம் மற்றும் பாரம்பரிய தமிழர் தாயகத்தின் அங்கீகாரம் உள்ளிட்டவைகளை முன்வைக்கும் தமிழ் தேசிய விருப்பத்தை குற்றம் சுமத்துவதாக உள்ளது.
தமிழ் தேசிய ஜனநாயக விருப்பம், தமிழ் தேசியத்தின் இறையான்மை மற்றும் கடந்த 1977ம் ஆண்டு கொண்டு வந்த வட்டுக்கோட்டை தீர்மானம் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் தமிழர்களின் முக்கிய கொள்கைகளாக உள்ளன.
கடந்த 1979-83 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் மீது விதிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act (PTA) மற்றும் அவசரகாலச் சட்டம்(Emergency Regulation(ER) ஆகியவை இன்றும் நடைமுறையில் உள்ளது.
தேசிய பாதுகாப்பு என்ற காரணம் கூறி இந்த சட்டங்கள் மூலம் தமிழர்களை ஒரு தலைப்பட்சமாக கைது செய்வது, சித்திரவதை செய்து பின்பு கொலை செய்வது உள்ளிட்ட கொடூரங்கள் இன்றளவும் நடந்து வருகிறது.
வட கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள இலங்கை இராணுவம், அங்குள்ள தமிழர்களை மிரட்டி, அவர்களை கூர்ந்து கண்காணித்து வருகிறது.
யுத்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையில் தமிழர்களின் பேச்சுரிமை மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடும் வாய்ப்புகளை தந்திரமாக முடக்கப்பட்டுள்ளதால், அவர்களின் அரசியல் கோரிக்கை மற்றும் தேவைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க சிறிதளவு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழர்களின் தேசிய விருப்பங்களை, இலங்கை அரசு ‘குற்றம் மற்றும் தீவிரவாத தன்மை’ உடையது முத்திரை குத்துவதால், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து விதமான அரசியல் தீர்மானங்களும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றையே அடையாளப்படுத்துகிறது.
இதனால், கொலும்புவின் இறையாண்மையை புறக்கணித்து, தமிழர்கள் தங்களுடைய தேசிய இறையாண்மையை தொடர்ந்து உறுதியுடன் காத்து வருவதுடன், இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி அவர்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பெப்ரவரி 10ம் திகதி தமிழர்களுக்காக தற்போது வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே சபையான வட மாகாண சபை(Northern Provincial Council (NPC) ஒருமனதாக வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.
தீர்மானத்தில், இனப்படுகொலை செய்த இலங்கை ஆட்சியாளர்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இது நசுக்கப்பட்ட தமிழர்களின் ஜனநாயக விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
ஆட்சி மாற்றத்தின் விளைவாக ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பிராந்திய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு தனிநிறுவனங்களின் சுய ஆட்சி சுதந்திரத்தை புதிய அரசு திரும்பி வழங்கியது.
இருப்பினும், புதிய அரசின் அடக்குமுறை ஒற்றையாட்சி அரசியலமைப்பு அப்படியே நடை முறையில் உள்ளதால் இதில் தமிழர்கள் பலனடையவில்லை.
தேர்தலின் வெற்றி கூட சிங்கள மக்களின் அதிருப்தியே ஒரு அடித்தளமாக விளங்கியதுடன் சிங்கள கட்சிகளிடையே பகைமை மூண்டது.
கட்சிகளிடையே பகைமை மூண்டாலும், நெருக்கடி நிலையில் தேசிய அளவில் அரசை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உண்மையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு மற்றும் அந்த வெற்றியின் விளைவு இரண்டு முக்கிய காரணங்களை எடுத்துரைக்கிறது. அவை:
1)தமிழ் இனப்படுகொலை மற்றும் தேசியப் பிரச்சினை குறித்து சர்வதேச அளவில் அழுத்தம் இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சியின் சட்டப்பூர்வ தன்மையை மீட்க வேண்டும்.
2) அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசிற்கு உள்ள பூகோள நலன்கள் குறித்து மறுதிருத்தம் ஏற்படுத்த வேண்டும். இதில் தமிழர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு நோக்கங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும். மைத்திரிபால சிறிசேனாவின் இந்த வெற்றி இலங்கையின் மேலதிகார மக்கள் மற்றும் புற அதிகார வர்க்கத்தினருக்கு இடையே உள்ள கூட்டுவாழ்வு சூத்திரத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
இலங்கையின் இறையான்மை
கடந்த 1833ம் ஆண்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, நவீன இலங்கை அரசின் ஒற்றையாட்சி அரசு நிர்வாகம் அமைக்கப்பட்டது.
1948ம் ஆண்டு சிங்கள இனத்தில் கல்வி அறிவு பெற்ற உயர்குடியினரிடம் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை வழங்கியது.
இதனை தொடர்ந்து, தேசிய இறையான்மை மற்றும் தேசிய ஒருமைபாடு ஆகியவற்றை முன்மொழிந்து சிங்கள–பெளத்த மக்களை உயர்த்தியும், தமிழர்களுக்கு எதிரான இனபாகுபாடு குறித்து பரப்புரையை செய்து அரசியல் ஆதாயத்தை சிங்களவர்கள் தேடினார்கள்.
இது நாட்டை இரண்டாக்கியதுடன் இல்லாமல் தேசிய ஒடுக்கு முறையையும் தோற்றுவித்தது. இலங்கை பிரச்சாரங்களில் சிங்களர்களை உயர்வாக காட்டும் வகையில், 6ம் நூற்றாண்டை சேர்ந்த பலி மஹாவம்ச (Pali Mahavamsa) கொள்கைகளை எடுத்து தங்களது ஆதாயத்திற்காக 20ம் நூற்றாண்டு அரசியலில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அதனால், இலங்கையின் வரலாறு, சிங்கள இனத்தின் மத்தியில் தமிழ் தேசியம் குறித்து கருத்துக்கள் அனைத்தும் மஹாவம்ச கொள்கைகளை பின்பற்றியே உள்ளது.
மேலும், இலங்கையின் இறையாண்மையை காரணம் காட்டி, தமிழ் தேசிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மறுக்கப்படுவதுடன், அவர்களை தேசத்தின் ஒருமைபாட்டிற்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கிறார்கள்.
இதன் மூலம், சிங்கள் உயர்குடி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக இலங்கை தேசம் சிங்கள மற்றும் பெளத்த மக்கள் பெரும்பான்மை பெற்ற நாடு என்பதை மறுப்பதற்கு இடமின்றி தொடர்ந்து சாதித்து வருகிறார்கள். தமிழர்களை தவிர்த்து, நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என பெருமை பட கூறிவருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கொள்கையை உறுதியுடன் பின்பற்றி வருகின்றனர். அதாவது, இலங்கை அரசின் அரசியல் மற்றும் சட்ட வட்டத்திற்குள்ளேயே முடங்கி கிடந்தால் நமது தமிழீழ இறையாண்மையை யாராலும் பாதுகாக்க முடியாது என்பது தான் அவர்கள் பின்பற்றி வரும் கொள்கை.
கொழும்பின் இறையாண்மை குறித்து சிங்களர்கள் பெருமைபட குரல் எழுப்பினாலும், எதிர்ப்புக் காலத்தில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய உண்மை நிலையை காட்டி தமிழர்கள் உரக்க குரல் எழுப்பினர்.
இலங்கையில் திறம்பட நடைமுறையில் உள்ள ஒரு தமிழ் தேசியம் நீடித்திருப்பது மட்டுமே சிங்கள ஆட்சியின் கற்பனை கூற்றுக்களை செயலற்றதாக்கவிட்டது.
தமிழ் தேசியத்தின் மீது பொருளாதார மற்றும் மருந்து பொருட்களை கொலும்பு நிரந்திரமாக தடைவிதித்த இரண்டு தசாப்தங்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசியத்தின் சுயாட்சி அணிதிரட்டி செயல்பட்டது.
தமிழர்கள் பின்பற்றும் இறையாண்மை ஒரு உண்மையை உணர்த்துகிறது. அது, தமிழர்கள் தற்சமயத்தில் நசுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் சுய நிர்ணயத்தையும் மற்றும் அதை மீட்டெடுக்கும் வசதி வாய்ப்புக்களையும் பறிகொடுத்துள்ள உண்மையை தெளிவுபடுத்துகிறது.

Geen opmerkingen:

Een reactie posten