தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 mei 2015

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது - ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது!: ஜனாதிபதி மைத்திரி


இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன் அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார்.
நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
(இரண்டாம் இணைப்பு)
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவு தொகை உயர்த்தப்பட்டுள்ளது!
ஜனாதிபதி நிதியத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இருதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தினால் உதவு தொகை வழங்கப்படுகிறது இதன்படி இருதய சத்திர சிகிச்சைக்காக இதுவரையில் வழங்கப்பட்ட ஒன்றரை லட்ச ரூபா உதவித் தொகை இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புற்று நோய் சிகிச்சை மற்றும் சீறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மூன்று லட்ச ரூபா உதவு தொகை நான்கு லட்ச ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் துமிந்த நாணயக்காரவினால் செய்யப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக உதவித்தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten