தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 mei 2015

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய,கருணாநிதி பாராட்டு

இலங்கை ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞை! கருணாநிதி பாராட்டு
[ புதன்கிழமை, 13 மே 2015, 11:54.45 AM GMT ]
 இலங்கை - இந்திய மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண மோடி தலைமையிலான அரசாங்கம் முன் வரவேண்டும் என திமுக தலைவர் மு,கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை - இந்திய மீனவர்களின் கலந்தாலோசனைக்கு விரைவில் ஏற்பாடு செய்து மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குச் சுமூகமானதொரு முடிவு மேற்கொள்ளத் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் துணை புரிய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ராமேஸ்வரம் மீனவர்கள் நேரில் சந்தித்து வேண்டிக் கொண்டதன் பேரில் இலங்கைச் சிறையில் அடைபட்டிருக்கும் 37 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்தும் மசோதாவினை பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம்
இலங்கை ஜனாதிபதி நமது மீனவர்களிடம் பேசும்போது, ‘‘இலங்கை வடக்கு மாகாண மீனவர்களிடம் பேசியதன் பின்னர்,தமிழக மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிப்பதற்கான திட்டம் வகுக்கப்படும். இது நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்’’ என்றெல்லாம் தெரிவித்திருப்பது நமது மீனவர்களுக்குப் பெரிதும் ஆறுதல் அளிக்கின்ற செய்தியாகும்.
இலங்கை ஜனாதிபதியின் இந்த நல்ல அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய அரசு குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு மீனவர்களின் கலந்தாலோசனைக்கு விரைவில் ஏற்பாடு செய்து நமது மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குச் சுமூகமானதொரு முடிவு மேற்கொள்ளத் துணை புரிந்திட வேண்டுமென்று வலியுறுத்துவதாக மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய
[ புதன்கிழமை, 13 மே 2015, 11:03.53 AM GMT ]
நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் போரில் உயிரிழந்த தங்களின் சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயங்கள் குறித்து விரைவில் அறிக்கையொன்று வெளியிடப்படும்.
பதவிக் காலம் பூர்த்தியான உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten