[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 08:48.03 AM GMT ]
ரொறொன்ரொவில் கிப்லிங் மற்றும் Steel வீதிக்கருகில் அமைந்துள்ள ஏசியா கோல்ட் நகை கடையில் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளை சம்பவத்தின் போது சந்தேக நபர் ஒருவர் 11-வயது சிறுமி மீது துப்பாக்கி விசையை பல தடவைகள் இழுத்துள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளிவரவில்லை.
இதனால் சிறுமி தப்பியுள்ளார். பின்னர் நகைக் கடைக்குச் சொந்தகாரர் மீதும் சுட முயன்ற போது அவர் இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இரண்டாவது பெண் சந்தேக நபர் கையில் டேசர் ஒன்றை வைத்திருந்து இரு ஊழியர்களை பயமுறுத்தியுள்ளார்.
இரண்டு பெண் சந்தேக நபர்களும் கடையில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு பிஎம்டபிள்யு வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
இருவரும் கறுப்பு நிறமுடைய 22 மற்றும் 27-வயதுடையவர்கள் எனவும் ஒருவர் பின்னிய தலை முடியுடையவர் என்றும் மற்றவர் தோள்- நீள பிறவுன் முடி கொண்டவர் எனவும் அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் 1-866-786-5423 EXT. 6620 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அனாமதேய குறிப்புக்கள் 1-866-222-TIPS என்ற இலக்கத்தில் கிரைம் ஸ்ரொப்பசிற்கு அனுப்பலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட்டமைப்பு கோரிய விடயங்கள் செய்யப்படவில்லை: அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 10:09.12 AM GMT ]
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்- கனவு காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆட்சிய மாற்றம் ஏற்பட்டு 100 நட்களைத் தாண்டிவிட்டது. இக்கால கட்டத்திற்குள்ளதான் அரச திணைக்களங்களும் தமிழ் தேசியக் கூடமைப்பை நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த அடிப்படை விடயங்கள் இன்றும் செய்து கொடுக்கப் படவில்லை.
தற்போது இங்குள்ள இளைஞர்கள் விளையாடுகின்றர்கள். இங்கு விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சமமான இளைஞர்கள் சிறைச்சாலையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில்தான் இந்த ஆட்சி மாறிய அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் எமக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நிலையான வாய்ப்பு இல்லாமலிருக்கின்றது.
அபிவிருத்தியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கடந்த 65 வருட காலமாக தெடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பிரச்சனைகுரிய தீர்வு கிட்டும்வரை எமது அரசியல் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எனவே தற்கால இளைஞர் யுவதிகள் திறந்த மனதுடனும் தூய்மையானவர்களாகவும் எமது மண் மீது பற்றுள்ளவர்களாகவும் மாறவேண்டும்.
யுத்தம் நிறைவுற்ற தற்போதைய நிலையிலும் மதுபாவனை அதிகரித்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இளையர்களை நல்வழிப்படுத்த நாங்கள் முயலும்போது மதுபான சாலைகள் தீயவற்றை தூண்டும் நடவடிக்கயில் ஈடுபடுகின்றன.
எனவே இளைஞர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து மனோ நிலையில் மபாற்றத்தைக் கொண்டுவந்து இந்த நாட்டிலே சிறந்த பிரஜைகளாக மாறவேண்டும். என அவர் தெரிவித்தார்.
விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு
வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் விளையாட்டு புத்துணர்வு நிகழ்வு சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டில் ஆற்றல் உடைய இளைஞர் சேவைகள் மன்றம் சகல இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கும் விதத்தில் கிராமத்திற்கு விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நாடு பூரான வேலைத் திட்டத்தில் வாழைச்சேனையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது கழகங்களுக்கிடையே மென் பந்து போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாகரை, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி மத்தி, ஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சகல இளைஞர் கழகங்களுக்கும் விளையாட்டுப் பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் வழங்கி வைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyFTXSUiq5A.html
Geen opmerkingen:
Een reactie posten