தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 mei 2015

எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும்: வேல்முருகன்



பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் இன அழிப்பு பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி திரு இதி.வேல்முருகன் கலந்து கொண்டார்.
அயல்நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்கும் பொருட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி திரு இதி.வேல்முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் இன அழிப்பு பேரணியில் கலந்து கொண்டு நிகழ்விற்கு தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார்
சிறிலங்கா அரசு எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள் வன்கொடுமைகள் தொடர்பாக ஆவேசமாக எடுத்துரைத்தார்.
நாம் ஒன்றுபட்டு எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகள் பங்கேற்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten