தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 mei 2015

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பினை கோரியுள்ளோம்: சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன்!



இலங்கையில் கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவினை வழங்க வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரியிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்குமிடையில் இன்றைய தினம் கொழும்பு தாஜ் ஹோட்டலில் காலை 9.30 மணி தொடக்கம் 10 மணிவரையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. இது தொடர்பாக, கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பினை நாங்கள் கோரியிருப்பதுடன், தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பரம் போர் வடுக்கள் ஆறவேண்டுமானால், இந்த நாட்டிலுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
அத்தகைய தீர்வு பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். என்பதை கேட்டிருக்கின்றோம். குறிப்பாக அவ்வாறான தீர்வு கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தமிழர்கள் நிரந்தரமான தீர்வினை பெற்றுள் கொண்டு சுயாட்சியுடன் வாழ முடியும். என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும் அதற்கு தாங்கள் ஒத்துழைப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். மேலும் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்திடம் அரசியல்ரீதியான தீர்வு இல்லை. மீள்குடியேற்றம் படையினரின் அனுமதியுடன் நடக்கின்றது.
படையினர் வெளியேற்றப்படாமல் மக்களை மீள்குடியேற்றுவது சாத்தியமற்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
ஐ.நா சர்வதேச விசாரணை தொடர்பாக தாங்கள் கவனம் எடுப்பதாக எமக்கு அவர்கள் கூறியிருக்கின்றார்.
மேலும் பல விடயங்கள் தொடர்பாக பேசியிருந்தோம். எனினும் அவை தொடர்பாக, முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜோன் கெரி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று முற்பகல் சந்தித்து பேசிய போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இதனை கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் காணப்படும் புதிய அரசியல் முன்னேற்றம் குறித்து திருப்தியடைய முடியும் எனவும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் கோரிக்கையை வென்றெடுக்க இதன் மூலம் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து கொண்ட ஜோன் கெரி இன்று மதியம் கென்யா நோக்கி புறப்பட்டுச் சென்றார். 
http://www.tamilwin.com/show-RUmtyFTXSUiq4F.html

Geen opmerkingen:

Een reactie posten