யாழில் மாட்டியது "மாத்தையா" குறூப்: ஆனால் இது புலிகள் இல்லை என்கிறார்கள் பொலிசார் !
[ May 02, 2015 03:50:46 PM | வாசித்தோர் : 39790 ]
யாழ்ப்பாணம் கட்டுவனில் இயங்கிய மாத்தையா குறூப் என்ற ரௌடிக்கும்பலை பொலிசார் நேற்று மடக்கிப்பிடித்தள்ளனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.கட்டவனில் நேற்றிரவு மாத்தையா குறூப் திடீர் தாக்குதலொன்றை நடத்தியிருந்தது. வீடொன்றிற்குள் புகுந்த மாத்தையா குறூப், இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
இதனையடுத்து, பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் மாத்தையா குறூப் ரௌடிகள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர். மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். மாத்தைகுறூப் கடந்த பல மாதங்களான இந்த பகுதியில் நாட்டாமை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
http://athirvu.com/newsdetail/3106.htmlபிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார் !
[ May 02, 2015 04:52:35 PM | வாசித்தோர் : 52700 ]
சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான்.
உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , மோபைல் கம்பெனியை ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக லண்டனில் மோபைல் போன் ஜாம்பவான்களாக இருந்த பல கம்பெனிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். உலக தரவரிசையில் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இவர் இடம்பித்தது மட்டும் அல்ல ,ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
கொஞ்ச பணம் சம்பாதித்துவிட்டால் கூட , அதனைவைத்து ரேடியோ நிலையம் TV நிலையம் என்று ஆரம்பித்து தமது புகழை பரப்ப நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் , சுபாஷ்கரன் மிகவும் வித்தியாசமானவர். அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை அவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார். தனது சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அவர் உதவிபுரியவில்லை. எத்தியோப்பியா முதல் , ஐரோப்பா வரை உள்ள பல நாடுகளில் கஷ்டப்படும் மக்களுக்கும் ,சிறுவர்களுக்கும் சுபாஷ் பல உதவிகளைப் புரிந்து வருகிறார். இதனை ஆதாரத்தோடு தற்போது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten