தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 mei 2015

கழுத்தில் நீல நிற சாரத் துண்டு இருந்தால் கொலைசெய்யவும்: கடைசி நேரத்தில் நடந்த வீடியோ

war crime by athirvu
மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகள் சொல்லமுடியாத ஒன்றாகும். ஏதோ நாய் ஒன்றின் கழுத்தில் அடையாளப் பட்டிகளை(பெலிட்) கட்டுவதுபோல சிங்கள காடை ராணுவத்தினர் தம்மிடம் சரணடைந்த புலிகளின் கழுத்தில் நீல நிற சாரத்தின் துண்டுகளை கட்டியுள்ளார்கள். அப்படி கட்டப்பட்ட அனைவரையும் சுட்டுக் கொலைசெய்துள்ளார்கள். இதற்கான ஆதார வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. எமது தேசத்தின் விடுதலைக்காக , அம்மா அப்பாவை துறந்து , காட்டிலும் மேட்டிலும் அலைந்து, உணவைக் கூட சரியாக உண்ணாமல் , இளமைக் கால நினைவுகளை துறந்து , காதல் என்றால் கூட என்ன என்று அறியாமல் இருந்தவர்கள் புலிகள். அப்படி தூய்மையாக இருந்த , கடவுளுக்கு ஒப்பான அவர்களை நாய் சுடுவதுபோல சுட்டுக் கொன்றுள்ளார்கள் சிங்கள ராணுவத்தினர்.
இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் சரணடைந்த பல விடுதலைப் புலிப் போராளிகள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களை காட்டிக்கொடுக்க என்று அங்கே தலையாட்டி ஒருவர் முகமூடி அணிந்து நிற்கிறார். மற்றும் அவருக்கு அருகாமையில் , நீல நிற சாரம்(கைலி) ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு சிங்களச் சிப்பாய் நிற்கிறான். அவன் அந்த சாரத்தின் துண்டுகளை கிழித்து சில புலிகள் உறுப்பினரின் கழுத்தில் கட்டிவிடுகிறான். ஆனால் அவர்களில் எவரும் தற்போது உயிரோடு இல்லை.
இது தொடர்பான முழு நீள ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Geen opmerkingen:

Een reactie posten